நமது முன்னிலையில் திரை நீக்கப்பட்டுள்ள வல்லமையுள்ள தேவன் Philadelphia, Pennsylvania, USA 64-0629 1சில வேதவாக்கியங்களை குறித்து வைத்துள்ளேன், அவைகளை ஆதாரமாகக் கொண்டு பேச விரும்புகிறேன். தேவன் தாமே நமது பலவீனமான முயற்சிகளை ஆசீர்வதிப்பாரென நம்புகிறேன். நாம் ஏன் வினோதமானவர்களாயும், சத்தமிடுகிறவர்களாயும் இருக்கிறோம் என்று அநேகர் வியப்புறுகின்றனர். ஜனங்கள் வழக்கமாக காண்பதைக் காட்டிலும் இது வித்தியாசமான ஒரு கன்வென்ஷன். பொதுவாக, எல்லாமே நிகழ்ச்சி நிரலிட்டு, ஒழுங்காக நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இத்தகைய கன்வென்ஷன் கூட்டங்களுக்கு நாம் வரும் போது (இது தொடங்கின முதற்கொண்டு நாம் வரும்போது இதில் பங்கு கொள்ளும் பெறும்பேறு நான் பெற்றுள்ளேன்) நாம் என்ன செய்யப் போகிறோம் என்று அறியாதவர்களாய், அவருடைய சமுகத்தில் சென்று நம்மை சமர்ப்பிக்கிறோம். அது ஒன்றை மாத்திரமே செய்ய நாம் அறிந்துள்ளோம். தேவன் மற்றவைகளைப் பார்த்துக் கொள்கிறார். அது தான் நம்மை வினோதமாக நடந்து கொள்ளும் ஜனங்களாகக் செய்கின்றது. அன்றொரு நாள் ஒருவர், ''நீங்கள் வினோதமான ஜனங்கள்'' என்றார். நான், ''அப்படித்தான் நினைக்கிறேன்'' என்று விடையளித்தேன். 2ஒரு கன்வென்ஷன் என் நினைவுக்கு வருகிறது. பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட ஒரு ஜெர்மானிய சகோதரனைக் குறித்து சகோ. ட்ரய் ஒரு சமயம் என்னிடம் கூறினார். அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட அடுத்த நாள், அவன் வேலை பார்த்திருந்த கடையில், அவன் கைகளையுயர்த்தி, கர்த்தரைத் துதித்து, அந்நிய பாஷை பேசி, காண்பதற்கு பயங்கரமாக நடந்து கொண்டிருந்தானாம். முடிவில் அவன் எஜமான் அவனை அணுகி, ''ஹெய்னி, உனக்கு என்ன நேர்ந்தது,'' என்று கேட்க, அவன், “ஓ, நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன், என் இருதயம் மகிழ்ச்சியினால் பொங்குகிறது'' என்றான். எஜமான், ''நீ அந்த திருகு மறை 'நட்'டுகள் (Nuts - அதாவது பைத்தியக்காரர்கள் என்று அர்த்தம். கொச்சை மொழியில் 'லூஸ்' என்பது போல் - தமிழாக்கியோன்) கூட்டத்திற்கு சென்றிருப்பாய்'' என்றான். அவன், ''ஆம், தேவனுக்கு மகிமை! திருகுமறை'' நட்டுகள் கூட்டத்தாருக்காக நன்றி. சாலையில் செல்லும் மோட்டார் வாகனத்திலுள்ள நட்டுகள் திருகுமறை எல்லாவற்றையும் கழற்றிவிட்டால் அது ஒன்றுக்கும் உதவாத வெறும் “இரும்புக் குவியலாகிவிடுமே'' என்றானாம். அது மிகவும் உண்மை. 3ஒரு நாள் நான் கலிபோர்னியாவில், லாஸ் ஆஞ்சலிஸ் தெருக்களின் வழியாக நான் சென்று கொண்டிருந்தபோது, ஒருவன் தன் மார்பில் ''நான் கிறிஸ்துவுக்காக முட்டாள்'' என்று எழுதி, நடந்து சென்று கொண்டிருந்தான். எல்லோருமே அவனை வியப்புடன் நோக்கினர். அவன் கடந்து சென்றவுடன் அவர்கள் திரும்பிப் பார்ப்பதை கவனித்தேன். நானும் என்னவென்று பார்க்கலாமே என்று நினைத்து அங்கு சென்று பார்த்தபோது, அவனுடைய முதுகில், ''நீங்கள் யாருடைய முட்டாள்'' என்று எழுதப்பட்டிருந்தது. நாம் ஒவ்வொருவருமே ஒரு வகையில் வினோதமானவர்களே. இவ்வுலகம் மோசமான நிலையையடைந்துள்ளதால், அதனின்று வித்தியாசப்பட்ட ஒன்று அவர்களுக்கு வினோதமாய் தென்படுகிறது, அவர்கள் அது தவறு என்று நினைக்க முற்படுகின்றனர். ஜனங்களை மறுபடியும் வேதாகமத்திற்குக் கொண்டு வர, தேவன் அசாதாரணமான ஒன்றை செய்ய வேண்டியதாயுள்ளது. 4நோவா அவன் வாழ்ந்த விஞ்ஞான காலத்தில் ஒரு பைத்தியக்காரனாக ஒரு “நட்” ஆக (Nut) காணப்பட்டான் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ஏனெனில் வானத்தில் தண்ணீர் இல்லை என்று அவர்களால் நிரூபிக்க முடிந்தது. ஆனால் தேவனோ அங்கு தண்ணீர் இருக்கும் என்று கூறினார். அதை விசுவாசித்து நோவா பிரசங்கித்த காரணத்தால், அவன் பைத்தியக்காரனாக “நட்” ஆக கருதப்பட்டான். மோசே எகிப்திற்கு சென்றபோதும், பார்வோனுக்கு அவன் பைத்தியக்காரனாக ''நட்“ஆக தென்பட்டான். ஆனால் அதே சமயத்தில் பார்வோனும் மோசேக்கு பைத்தியக்காரனாக ”நட்''ஆக தென்பட்டான் என்பதை ஞாபகம் கொள்ளவும். அது நமக்குத் தெரியும். 5இயேசுவும் கூட மதத் துரோகியாக (heretic) கருதப்பட்டார். அது உண்மை. மார்டின் லூத்தர் கத்தோலிக்க சபைக்கு பைத்தியக்காரனாக ''நட்“ ஆக விளங்கினார். ஜான் வெஸ்லி ஆங்கிலகன் சபைக்கு பைத்தியக்காரனாக ”நட்“ ஆக தோற்றமளித்தார். வேறொரு திருகுமுறை தோன்றுவதற்கு நேரம் வந்துவிட்டது. அப்படித்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) திருகுமுறை இருப்பதற்கு முன்பே, அதை போடுவதற்கு ஒரு ஆணி (bolt) இருக்கவேண்டும். திருகுமறையை ஆணியில் போடும்போது, அது இருதுண்டுகளை ஒன்றாக சேர்த்து அதை இறுக இணைக்கின்றது. அவ்வாறே நோவாவும், அவன் திருகுமுறையாயிருந்த காரணத்தால், விசுவாசித்தவர்கள் அனைவரையும் பேழையில் ஒன்றாக சேர்த்து இணைத்து, அவர்களை நியாயத் தீர்ப்பிலிருந்து விடுவிக்க முடிந்தது. ஒரு ''நட்”ஆக அவன் இருந்ததால். அவ்வாறே மோசேயும் சபையை எகிப்திலிருந்து வெளியே இழுத்து, அவர்களை ஒன்றாக இணைத்த திருகுமுறையாயிருந்தான். அது உண்மை. 6இப்பொழுதும் மணவாட்டியை சபையிலிருந்து வெளியே இழுத்து ஒன்றாக இணைக்க ஒரு திருகுமுறை அவசியமென்று எண்ணுகிறேன். நமக்கு இப்பொழுது வேறொரு திருகுமுறை அவசியமாயுள்ளது. எனவே, நாம் விசித்திரமான ஜனங்கள். கர்த்தருக்கு சித்தமானால், இதைக் குறித்த சில வேத வசனங்களை இப்பொழுது நாம் படித்து நாம் ஏன் வினோதமானவர்களாயிருக்கிறோம் என்பதைப் பற்றி சிறிது நேரம் உங்களிடம் பேசலாம் என்று எண்ணுகிறேன். இப்பொழுது நாம் பிலிப்பியர் 2-ம் அதிகாரம் 1 முதல் 8 வசனங்களுக்கும், 2 கொரிந்தியர் 3:6-க்கும் வேதத்தைத் திருப்புவோம். தேவனுடைய வசனத்தை விசுவாசிக்கிறவர்களாய், அதை நாம் படிப்போம். நாம் படிக்கும் முன்பு, ஜெபத்திற்காக தலைவணங்குவோம். 7கிருபையுள்ள பரலோகப்பிதாவே, இன்றிரவு இக்காலத்தில் வாழ்ந்து, நடந்து கொண்டிருப்பவைகளைக் காண்பதற்கு நாங்கள் உண்மையாகவே சிலாக்கியம் பெற்றவர்களாயிருக்கிறோம். இயேசு சபைக்காக வரும் நேரம் அருகில் வந்து விட்டது என்பதை உணருகிறோம். ஓ, ஆண்டவரே, அது எங்கள் இருதயங்களை சிலிர்க்க வைக்கின்றது. இன்றிரவு நாங்கள் வேதாகமத்தைத் திறந்து படிக்கும் போது, இதற்கான பொருளைத் தரும்படி வேண்டிக் கொள்கிறோம். பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனுக்கு நன்மையும் பிரியமுமான காரியங்களை எங்களுக்கு வெளிப்படுத்தித் தருவாராக! இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 8நீங்கள் ஒரு காரியத்தை செய்ய வேண்டுமென்று இப்பொழுது கேட்டுக் கொள்கிறேன். நான் வழக்கமாக வினோதமான காரியங்களைச் செய்ய வேண்டுமென்று கேட்பதுண்டு. நான் அதிக வினோதமான ஒன்றையும் இப்பொழுது கேட்கப் போவதில்லை என்று நம்புகிறேன். நாம் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும்வகையில், அது கடந்துசெல்லும் வரை, எழுந்து நிற்கிறோம். அப்படி நாம் நிச்சயம் செய்ய வேண்டும். நாம் நின்று அதற்கு வணக்கச் செயலை (Salute) செய்கின்றோம். அது போன்று, தேவனுடைய வார்த்தையை இப்பொழுது நாம் படிக்கும் போது எழுந்து நிற்போம். 2 கொரி 3: 6-18 புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது. ஆவியோ உயிர்ப்பிக்கிறது. எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக் கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக் கூடாதிருந்தார்கள். ஒழிந்து போகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்? ஆக்கினைத் தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்கு முன்பாக மகிமைப்பட்டதல்ல. அன்றியும் ஒழிந்து போவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம். மேலும் ஒழிந்து போவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப் பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின் மேல் முக்காடு போட்டுக்கொண்டது போல நாங்கள் போடுகிறதில்லை. அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள் வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின் மேல் இருக்கிறதே. அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போகும். கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறது போலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்த சாயலாகத்தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். (2 கொரி, 3: 6 - 18). 9பிலிப்பியர் 2-ம் அதிகாரத்தில் இதை வாசிக்கிறோம் (முதலாம் வசனம் தொடங்கி 8-ம் வசனம் முடிய வாசிப்போம்). ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால், நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக் கடவது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். (பிலி 2: 1-8). 10ஜெபம் செய்வோம்: பரலோகப் பிதாவே, உம்முடைய பரிசுத்த கிரந்தத்திலிருந்து இன்றிரவு வாசிக்கப்பட்ட இந்த மகத்தான வார்த்தையை எங்கள் இருதயங்களில் மிகவும் தத்ரூபமாக்கும். நாங்களும் எம்மாவூருக்குச் சென்று கொண்டிருந்த சீஷர்களைப் போல், வழியிலே அவர் நம்முடனே பேசின போது, “நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?” என்று கூறி இவ்விடம் விட்டுச்செல்ல கிருபையருளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் உட்காரலாம்). 11இது ஒரு வினோதமான பொருள். ஆனால் இந்த நேரத்துக்கு அது மிகவும் பொருத்தமானது என்று கருதுகிறேன். ''நமது முன்னிலையில் திரை நீக்கப்பட்டுள்ள வல்லமையுள்ள தேவன்'' என்னும் பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். மனிதன் தோன்றின முதற்கொண்டு, அவன் எங்கிருந்து வந்தானென்றும், அவன் இங்குள்ள காரணம் என்னவென்றும், அவன் எங்கு செல்கிறான் என்றும் அறிந்து கொள்ள அவன் இருதயத்தில் ஒரு பசி இருந்து வந்துள்ளது. இவைகளுக்கு விடையளிக்கக் கூடியவர் ஒருவரே. அவர்தான் இவ்வுலகில் அவனைத் தோன்றச் செய்தவர். தேவனைக் காண வேண்டுமெனும் வாஞ்சை மனிதனுக்கு எப்பொழுதுமே இருந்து வந்துள்ளது. 12பழைய ஏற்பாட்டின் காலத்தில், தேவன் அவிசுவாசிகளுக்கு தம்மை திரையிட்டு மறைத்துக் கொண்டதாக நாம் காண்கிறோம். தேவன் வினோதமான வழியில் ஜனங்களுடன் தொடர்புகொண்டு வந்துள்ளார். அவர் தம்மை அவிசுவாசிகளுக்கு மறைத்துக் கொண்டு, விசுவாசிகளுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார். தேவன் அவ்விதம் செய்கிறார். இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால், இயேசு பிதாவுக்கு நன்றி தெரிவித்தார். தேவன் தமது சுபாவத்தை எக்காலத்திலும் மாற்றிக் கொள்வதில்லை. அவர் தம்முடைய செயல்பாட்டை அதே விதமாகவே எப்பொழுதும் செய்கின்றார். மல்கியா 3-ல் அவர், ''நான் கர்த்தர், நான் மாறாதவர்'' என்று கூறியுள்ளதைக் காண்கிறோம். எனவே அதே கொள்கையின் அடிப்படையில் அவர் எப்பொழுதும் கிரியை செய்து வருகிறார். 13வேதத்தில் காணப்படும் மிகப் பழைமையான புத்தகங்களில் ஒன்றை நாம் எடுத்துக் கொள்வோம். யோபு, அவனுடைய காலத்தில் மிகவும் நீதிமானாயிருந்தான். அவன் தேவனுடைய பிரமாணங்களை பிழையின்றி கைக் கொண்டவன். அவன் கெளரவமான தேவனுடைய தாசன். அவனைக் குறித்து கர்த்தர், ''அவனைப் போலப் பூமியில் ஒருவனும் இல்லை'' என்றார். தேவன் ஒருவர் இருக்கிறார் என்று யோபு அறிந்திருந்தான். அவரைக் காண அவன் விரும்பினான். அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று கதவைத் தட்டி, ''உம்முடன் பேச விரும்புகிறேன்'' எனக் கூறி, அங்கு உட்கார்ந்து அவருடன் பேச விரும்பினான் - நாம் ஒருவரோடொருவர் பேசுவது போல். நாம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டுள்ளோம். அதன் விளைவாகவே நாம் இத்தகைய கன்வென்ஷன்களில் ஒன்றுகூடி, நம்முடைய கருத்துக்களை வெளிப்படையாகக் கூறுகிறோம். இப்படி நாம் ஒருவரோடொருவர் பேசி கருத்துக்களை பகிரிந்து கொள்ளும் போது, நாம் இன்னும் அதிகமாக ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறோம். போதகர்களும் அவ்வாறு செய்கின்றனர். வெவ்வேறு துறையிலுள்ளவர்களும் அவ்வாறே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். 14யோபு... தேவன் அவனுக்கு மிகவும் தத்ரூபமாக இருந்த காரணத்தால், அவன் அங்கு சென்று கதவைத் தட்டி அவரைப் பேட்டி காண விழைந்தான். தேவன் அவனுடன் பேசினார் என்று நாம் காண்கிறோம்; ஆனால் அவர் திரை மறைக்கப்பட்டிருந்தார். அவர் சுழல்காற்று என்னும் உருவில் திரைமறைக்கப்பட்டிருந்தார். அவர் யோபிடம் இடைக் கட்டிக்கொண்டு புருஷனைப்போல் வரும்படி கூறினார். அவர் மனிதனைப் போல் அவனுடன் பேசப் போகின்றார். அவர் பெருங்காற்றில் இறங்கி வந்து யோபிடம் பேசினார். அந்த பெருங்காற்றின் மூலம் அவர் யோபுக்கு அறியப்பட்டார். ஆயினும் அவன் அவரை நன்றாக காணமுடியவில்லை. காற்று அடித்து மரங்களில் சலசலப்பு உண்டாக்குவதை அவனால் கேட்க முடிந்தது. அந்த பெருங்காற்றிலிருந்து ஒரு சத்தம் புறப்பட்டு வந்து அவனுடன் பேசினது. தேவன் பெருங்காற்றில் திரை மறைக்கப்பட்டிருந்தார். 15தென் ஆப்பிரிக்காவில் அவர்கள் 'அமோயா' (Amoyah) என்னும் சொல்லை உபயோகிக்கின்றனர். அது காணக் கூடாத சக்தி என பொருள்படும். பெருங்காற்றிலிருந்த அந்த காணக்கூடாத சக்திக்கு மற்றவர்கள் கேட்கக் கூடிய ஓசை இருந்தது. அது யோபிடம் பேசினது. ஆயினும் அவருடைய உருவத்தை அவன் காணவேயில்லை. ஆனால் அவர் அவனுக்கு பெருங்காற்றினால் திறை மறைக்கப்பட்டிருந்தார். வேதத்தின் மகத்தான தீர்க்கதரிசிகள் ஒருவனான பழைய ஏற்பாட்டின் மோசே தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அவனும் அவரைக் காண வாஞ்சித்தான். அவன் அவருக்கு மிகவும் நெருங்கியவனாக இருந்தான். அவருடைய மகத்தான, காணக் கூடாத கரம் அவனுக்கு முன்னால் சென்று, அநேக மகத்தான செயல்களைப் புரிந்தது. அவைகளை தேவன் மாத்திரமே செய்திருக்க முடியும். ஒரு நாள் மோசே அவரைக் காண விரும்பினான், தேவன் அவனிடம் ''அங்கே கன்மலையில் நில்லு'' என்றார். மோசே கன்மலையில் நின்று கொண்டிருந்த போது அவர் கடந்து போவதை அவன் கண்டான். அவருடைய பின் பக்கத்தை மாத்திரமே அவன் கண்டான். அது மனிதனைப் போல இருந்ததாக அவன் கூறினான் - மனிதனின் பின் பக்கத்தைப் போல். ஆயினும் அவன் தேவனைக் காணவில்லை. அவருடைய திரையை மாத்திரமே அவன் கண்டான். 16''தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்'' என்று வேதம் கூறுகின்றது. எனவே மோசே அவரை மனிதன் என்னும் திரையில் கண்டான். பழைய ஏற்பாட்டின் யேகோவாவே புதிய ஏற்பாட்டின் இயேசு கிறிஸ்து என்று நாம் காண்கிறோம். இங்கு டாக்டர் ஸ்கோஃபீல்டு என்பவர், ''உருவத்தை மாற்றிக் கொள்ளுதல்“ என்று கூறுகிறார். கிரேக்க மொழியில் என்மார்ஃப் (En morphe) என்னும் சொல், ”காணக் கூடாதது காணக் கூடியதானது'' என்று பொருள்படும். காணக்கூடாதது... அது இருக்கிறது என்று நமக்குத் தெரியும். ஆனால் அதை நாம் காணமுடியாது. ஆயினும் அது இருக்கிறது என்று நமக்குத் தெரியும். அவர் தமது உருவத்தை மாற்றிக் கொண்டார் என்னும்போது, அவர் இயற்கைக்கு மேம்பட்ட நிலையிலிருந்து இயற்கையின் நிலைக்கு மாறினார் என்று அர்த்தம்.... அவர் தமது முகமூடியை (mask) மாற்றிக் கொண்டார். அது ஒரு நாடகத்தைப் போன்றது. அவர் அதில் நடித்தார். கிரேக்க நாடகங்களில் ஒரே நடிகன் அநேக கதாபாத்திரங்களின் பாகத்தை ஏற்று நடிப்பது வழக்கம். அவன் ஒவ்வொரு முறையும் தன் முகமூடியை மாற்றிக் கொள்வான். என் மகள் (அவள் இங்கிருக்கிறாள்). அவளுடைய உயர் நிலைப்பள்ளியில் அவர்கள் ஒரு நாடகத்தை நடத்தினர். அதில் எனக்குத் தெரிந்த ஒரு பையன் நான்கு பாத்திரங்களில் நடித்தான். ஒவ்வொரு முறையும் அவன் நாடக மேடைக்குப் பின்னால் சென்று, மற்ற பாத்திரத்துக்குரிய முகமூடியை அணிந்துகொண்டு வந்தான். 17மேசியா எவ்வாறு இருப்பார் என்று பழைய ஏற்பாட்டில் உரைக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களை நீங்கள் எடுத்துக் கொண்டு அதை இயேசுவின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இயேசு யாரென்பதை நீங்கள் திட்டவட்டமாக அறிந்து கொள்வீர்கள். இயேசு ஒரு சாதாரண மனிதன் அல்ல. அவர் தேவன் - உருவத்தை மாற்றிக் கொண்டவர் (En morphe). அவர் இயற்கைக்கு மேம்பட்ட நிலையிலிருந்து மனிதன் என்னும் இயற்கையின் நிலைக்கு தம்மை மாற்றிக்கொண்டார். ஆனாலும் அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன். அவர் மனிதன் என்னும் மாம்சத் திரையினால் திரை மறைக்கப்பட்டிருந்தார். பழைய ஏற்பாட்டைக் கவனியுங்கள். உலகின் வெவ்வேறு பாகங்களிலிருந்து வந்து இங்கு கூடியுள்ள கலப்பு கூட்டத்தில் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று அறிவேன். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்? என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது? இதன் அர்த்தம் என்ன? என்பதையெல்லாம் அறிந்து கொள்ளவே இங்கு நாம் வந்துள்ளோம். 18அக்காலத்திலிருந்த யூதர்களும், ஜெப ஆலயங்களிலிருந்த ரபீக்களும், பாரம்பரியத்திற்குப் பதிலாக வேதத்திலுள்ள தீர்க்கதரிசனங்களைக் கவனித்திருப்பார்களானால், இயேசு யார் என்பதை அடையாளம் கண்டுகொண்டிருப்பார்கள். அவர்கள் அவரை 'பெயல்சபூல்' என்று அழைத்திருக்கமாட்டார்கள். அவரை சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள். ஆனால் இவையாவும் நாடகத்தில் நடிக்கப்பட வேண்டியதாயிருந்தது. இது நாடகத்தின் ஒரு பாகம். அவர்கள் இவ்விஷயத்தில் குருடாக்கப்பட்டிருந்தனர். 19இன்றிரவு ஏறக்குறைய என் வயதுள்ள இங்குள்ளவர்கள், அல்லது என்னைக் காட்டிலும் வயதில் மூத்தவர்கள் இதை அறிந்திருப்பார்கள். உங்களுக்கு ஞாபகமிருக்கும். அநேக ஆண்டுகளுக்கு முன்பு சீனர்கள் (இப்பொழுது ஒரு சீன சகோதரனுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, இது எனக்கு ஞாபகம் வந்தது). அவர்கள் எப்படி... அவர்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. அவர்கள் சலவைச் சாலைகளை நடத்தி வந்தனர். உங்கள் துணிகளை சலவைக்கு அங்கு கொண்டு செல்லும்போது, அந்த சீனச் சலவைக்காரன் ஒரு காகிதத்தை எடுத்து அதை ஒரு பிரத்தியேக முறையில் கிழிப்பான். ஒரு துண்டை நீங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்வீர்கள். மற்ற துண்டை அவன் வைத்துக் கொள்வான். சலவை செய்த துணிகளை எடுத்து செல்ல நீங்கள் வரும்போது, இவ்விரு துண்டுகளும் புறாவின் வாலைப்போல் பிழையின்றி இணைய வேண்டும். அது அவ்வாறு இணையாமற் போனால் (அதை நீங்கள் எந்த விதத்திலும் பாவனை செய்ய முடியாது). ஏனெனில் அவனிடம் ஒரு துண்டு உள்ளது; உங்களிடம் மற்ற துண்டு உள்ளது. அவை இணைந்தால் மாத்திரமே சலவைத் துணிகளை நீங்கள் பெற்றுக் கொள்ள உங்களுக்கு உரிமையுண்டு. உங்களிடம் அந்த ஒப்பந்தத்தின் (Contract) மற்ற பாகம் இருந்தால் மாத்திரமே உங்களுக்குச் சொந்தமானதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அது போன்று, ஒப்பந்தத்தின் மற்ற பாகத்தை இன்றிரவு நாம் பெற்றிருக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். கல்வாரியில் தேவன் தமது குமாரனை இரண்டாகக் கிழித்து, அவருடைய சரீரத்தை பலியாக மேலே எடுத்துக் கொண்டு, ஒரு சமயம் இயேசு என்னும் மனிதனில் வாசம் செய்த ஆவியை நமக்கு கீழே அனுப்பித் தந்தார் (அதே தேவன் இன்றிரவு பரிசுத்த ஆவி என்னும் உருவத்தில் திரையிடப்பட்டிருக்கிறார்). அந்த இரு துண்டுகளும் ஒன்றாக இணைய வேண்டும். அப்பொழுது மாத்திரமே நீங்கள் ஒப்பந்தத்தின் ஒரு பாகமாக இருப்பீர்கள். தேவன் தம்மை மனிதனாக ஆக்கிக் கொண்டார். மனிதன் அவரை மேலான விதத்தில் அறிந்து கொள்ள வேண்டுமென்று கருதியே அப்படிச் செய்தார். 20சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கதையைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் உயர் குலத்தில் பிறந்த ஒரு அரசனைக் குறித்து எழுதப்பட்டிருந்தது. அவன் பெயர் இப்பொழுது எனக்கு மறந்துவிட்டது. அந்த கதையை இங்கு கூறுவேன் என்று நினைக்கவில்லை. அது ஒருக்கால் கட்டுக்கதையாக இருக்கலாம். ஆனால் நான் கூறவிருப்பதற்கு பின்னணியாக இது அமைந்து, அது வலியுறுத்தும் ஒன்றாக இது உள்ளது. இந்த அரசன் உயர் குலத்தான். அவன் தன் பிரஜைகளை அதிகமாக நேசித்தான். ஒரு நாள் அவன் தன் குடும்பத்தாரிடமும், காவலாளியிடமும், இன்னும் அநேக ஆண்டுகள் என்னைக் காணமாட்டீர்கள்'' என்றான். அவர்கள், “நல்ல அரசனே, ஏன் அவ்வாறு கூறுகின்றீர்? நீர் அயல் நாட்டிற்கு சென்று அங்கு அயலானாக வசிக்கப் போகின்றீரோ?'' என்று கேட்டனர். அவனோ, “இல்லை, நான் இந்நாட்டிலேயே இருக்கப் போகின்றேன். என் பிரஜைகளின் மத்தியில் நான் சென்று விவசாயினிடம் விவசாயம் செய்து, மரம் வெட்டுபவன் கூட மரம் வெட்டி, உழுபவனுடன் உழுது, திராட்சை தோட்டக்காரனுடன் திராட்சை தோட்டக்காரனாயிருந்து கிளைகளை நறுக்குவேன். அவர்களையும் அவர்கள் செய்யும் பணிகளையும் தனிப்பட்ட விதத்தில் சிறப்பாக புரிந்து கொள்ள நானும் அவர்களில் ஒருவனாக ஆகப் போகின்றேன். அவர்களை நான் நேசிக்கிறேன். அவர்கள் நான் யாரென்று அறிந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நான் மாறுவேடத்தில் செல்வேன். அவ்வகையில் அவர்களை நான் நன்கு அறிந்து கொள்வேன்'' என்றான். 21அடுத்த நாள் காலையில் அவன் தன் கிரீடத்தைக் கழற்றி சிம்மாசனத்தின் மேல் வைத்துவிட்டு, அங்கியைக் கழற்றிவைத்து உழவனின் உடைகளை உடுத்து பிரஜைகளிடம் செல்வதை அரண்மனையிலிருந்தவர் கண்டனர். அந்த சிறு கதையில் நாம் தேவனை பற்றி அறிந்து கொள்கிறோம். அரண்மனையிலிருந்த அனைவரும், ''ராஜாவே, நீர் எங்களுக்குத் தேவை. உம்மை நாங்கள் நேசிக்கிறோம். நீர் ராஜாவாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம்'' என்றனர். ஆனால் அவன் அவர்களை நன்கு அறிந்து கொள்ளவும் அவர்கள் அவன் நற்பண்புகளை நன்கு அறிந்து கொள்ளவும் அவர்களில் ஒருவனாக ஆக விரும்பினான். அவன் யாரென்பதை அது அவர்களுக்கு வெளிப்படுத்தும். 22தேவனும் அதைத் தான் செய்தார். அவர் நம்மில் ஒருவராக இருப்பதற்காக, யேகோவா தேவனாக இருப்பதிலிருந்து தம்மை மாற்றிக் கொண்டார். அவர் பாடுபட, மரணத்தை ருசிபார்க்க, மரணத்தின் கூடாரம் என்னவென்பதை அறிந்து கொள்ள, மரண ஆக்கினையை தம் மேல் ஏற்றுக்கொள்ள, தமது கிரீடத்தையும் அங்கியையும் அவர் கழற்றி வைத்துவிட்டு நம்மில் ஒருவராகஆனார். அவர் எளியவர்களின் பாதங்களைக் கழுவினார், ஏழ்மையானவர்களின் கூடாரங்களில் தங்கினார், நலிவுற்றோருடன் காடுகளிலும் தெருக்களிலும் உறங்கினார். நம்மை அவர் நன்கு புரிந்து கொள்ளவும், நாம் அவரை நன்கு புரிந்து கொள்ளவும், அவர் நம்மில் ஒருவராக ஆனார். 23நீங்கள் கவனிப்பீர்களானால், அவர் தம்மை மாற்றிக் கொண்டபோது, அவர் மூன்று குமாரன் நாமங்களில் வந்ததாக நாம் பார்க்கிறோம். அவர் மனுஷகுமாரன் (Son of Man), தேவனுடைய குமாரன் (Son of God), தாவீதின் குமாரன் (Son of David) என்னும் நாமங்களில் வந்தார். எசேக்கியல் 2:3-ல், யேகோவாவே எசேக்கியலை மனுபுத்திரன் (Son of man) என்றழைத்தார். 'மனுபுத்திரன்' அல்லது 'மனுஷகுமாரன்' என்றால் 'தீர்க்கதரிசி' என்று பொருள். மோசே உபாகமம் 18:15ல், ''உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உன் நடுவே எழும்பப் பண்ணுவார்'' என்று உரைத்ததை நிறைவேற்ற அவர் மனுஷகுமாரனாக வரவேண்டியதாயிற்று. அவர் தம்மை தேவனுடைய குமாரன் என்று அழைத்துக் கொள்ளவில்லை. மனுஷகுமாரன் என்று தான் அழைத்துக் கொண்டார். ஏனெனில் வேதப்பிரகாரமாக அவர் வரவேண்டியதாயிருந்தது. பார்த்தீர்களா? கிழிக்கப்பட்ட அந்த இரு காகிதத் துண்டுகளையும் - அதாவது பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனம், அவருடைய தன்மை என்னும் இரண்டையும் - அவர் ஒன்றாக இணைக்க வேண்டியதாயிருந்தது. எனவே அவர் மனுஷகுமாரன் என்னும் உருவில் வந்தார். 24அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் இவைகளுக்குப் பிறகு, பெந்தெகொஸ்தே நாளன்று அவர் தேவனுடைய குமாரனாக - ஆவியின் ரூபத்தில் பரிசுத்த ஆவியாக - வந்தார் என்று நாம் பார்க்கிறோம். அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவர் தம்மை மாற்றிக் கொண்டு, வேறொரு ரூபத்தில் தமது மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார். அவர் பரிசுத்த ஆவியாக - அது தேவன் - சபையின் காலங்களில் தொடர்பு கொள்ள தேவனுடைய குமாரனாக வந்தார். ஆனால் ஆயிரம் வருட அரசாட்சியின் போது, அவர் தாவீதின் குமாரனாக - ராஜாவாக - தாவீதின் சிங்காசனத்தில் உட்கார வருவார். அவர் தாவீதின் சிங்காசனத்தில் உட்கார வேண்டும். இப்பொழுது அவர் பிதாவின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். அவர், ''நான் ஜெயங்கொண்டு, என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்கார்ந்தது போல, ஜெயங் கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்'' என்றார். எனவே ஆயிரம் வருட அரசாட்சியில் அவர் தாவீதின் குமாரனாக இருப்பார். அது என்ன? அதே தேவன் வெவ்வேறு காலங்களில் தமது முக மூடியை மாற்றிக் கொள்ளுதல். நான் என் மனைவிக்கு கணவன். 25அந்த சீரோபோனிக்கியா தேசத்து ஸ்திரீ என்ன சொன்னாள் என்று கவனித்தீர்களா? “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்.'' அது அவரை சிறிதேனும் அவள் மீது பரிதாபம் கொள்ளச் செய்யவில்லை. ஏனெனில் அவரை அவ்வாறு அழைக்க அவளுக்கு உரிமையில்லை. அவளுக்கு அவர் மேல் தாவீதின் குமாரன் என்னும் வகையில் உரிமையில்லை. அவர் யூதர்களுக்கு மாத்திரமே தாவீதின் குமாரன். அவள் 'ஆண்டவரே' என்று கூப்பிட்ட போது (அவர் அவளுக்கு ஆண்டவர்), அவள் கேட்டதைப் பெற்றுக் கொண்டாள்... அவர் தம்மை மாற்றிக்கொண்டிருந்தார். 26என் வீட்டில் நான் மூன்று வெவ்வேறு ஆளாக இருக்கிறேன். என் மனைவி என்னை கணவன் என்று உரிமை கொண்டாடுகிறாள். அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் என் மகள் என்னை கணவன் என்று உரிமை கொண்டாடுவது கிடையாது. நான் அவளுக்குத் தந்தை. அங்குள்ள என் சிறு பேரனுக்கு நான் பாட்டனார். அவனுக்கு என்னை 'அப்பா'வென்று அழைக்க உரிமையில்லை. நான் அவனுக்குத் தந்தையல்ல. என் மகன் தான் அவனுக்குத் தந்தை. நான் அவனுக்குப் பாட்டனார். ஆனால் நான் அதே மனிதன் தான். தேவன் என்ன செய்கிறார் என்றால், அவர் ஒரு சந்ததிக்காக தம்மை மாற்றிக் கொண்டு, அந்த சந்ததியிலுள்ள ஜனங்களுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார். அதை கண்டு கொள்வதற்காகத்தான் நாம் இங்கு வந்திருக்கிறோம். இந்த காலத்திற்கும், இந்த காலத்திலுள்ள ஜனங்களுக்கும், தேவன் தம்மை எந்த முறையில் வெளிப்படுத்த வேண்டும்? அவர் தமது முகமூடியை மாற்றிக் கொள்கிறார். தமது நடிப்பை மாற்றிக் கொள்கிறார். ஆனால் தமது தன்மையை அவர் மாற்றிக் கொள்வதில்லை. அவர் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தமது முகமூடியை மாற்றிக் கொள்கிறார். அவர் யாரென்றும் என்னவென்றும் ஜனங்களுக்கு வெளியரங்கமாக்க அவர் இப்படி செய்கிறார். 27''பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் (இயேசு) மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்'' என்று எபிரெயர் 1-ல் படிக்கிறோம். இயேசு இவ்வுலகில் இருந்தபோது, தீர்க்கதரிசிகளை தேவர்கள் என்று குறிப்பிட்டார். “தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்ட வர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேத வாக்கியமும் தவறாததாயிருக்க, நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?” என்று அவர் கேட்டார். பாருங்கள்? 28தேவனுடைய வார்த்தை ஒவ்வொரு காலத்திற்கும் அளிக்கப்பட்டது - அது என்னவாயிருக்க வேண்டுமென்று. இயேசு எல்லா தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக இருந்தார். ''தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது'' அது அவருக்குள் வாசமாயிருந்தது. யோசேப்புக்குள் இருந்தவர் அவரே. எலியாவுக்குள் இருந்தவர் அவரே. மோசேக்குள் இருந்தவர் அவரே. தாவீதுக்குள் - புறக்கணிக்கப்பட்ட அந்த ராஜாவுக்குள் - இருந்தவர் அவரே. தாவீது தன் சொந்த ஜனங்களால் புறக்கணிக்கப்பட்டான். அவன் அரண்மனையை விட்டு வெளியே வந்தபோது, அவனுடைய அரசாங்கத்தின் மேல் வெறுப்பு கொண்ட ஒரு முடவன் தரையில் நகர்ந்து வந்து அவன் மேல் துப்பினான். தாவீதின் மெய்க்காப்பாளன் பட்டயத்தை உருவி என் ராஜாவை தூஷித்த செத்த நாயின் தலையை விட்டுவைப்பதா?'' என்று குமுறினான். அச்சமயம் தாவீது தான் புரிந்த செயலின் அர்த்தத்தை உணர்ந்திருக்க மாட்டான். அவன் அபிஷேகம் பெற்றவனாயிருந்தான். அவன், “அவனை விட்டுவிடு. தாவீதைத் தூஷிக்க வேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார் ” என்றான். அவன் மலையின் மேல் ஏறி, புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக, எருசலேமை நோக்கிக் கதறினான். சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தாவீதின் குமாரன் தெருக்களில் துப்பப்பட்டவராய், அதே மலையின் மேலேறி, புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக எருசலேமை நோக்கி, ''எருசலேமே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக, நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ளமனதாயிருந்தேன். உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று“ என்று கூறினதை கவனித்தீர்களா?'' 29அவர் தமது தன்மையை ஒருபோதும் மாற்றிக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர், “நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று எபி. 13:8 உரைக்கிறது. நம்மை பாவத்தினின்று மீட்டெடுக்க அவர் மரிக்க வேண்டுமெனக் கருதி, தேவன் மாம்சமானார். அதனால் தான் அவர் தம்மை மனித உருவிற்கு மாற்றிக்கொண்டார். யோவான் 12:20-ல் கிரேக்கர்கள் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டதாக நாம் பார்க்கிறோம். அவரைக் குறித்து கேள்விப்பட்ட பின்பு, அவரைக் காண வேண்டுமெனும் வாஞ்சை தங்கள் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரியாதவர் யாருமே இல்லை. யோபும், பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளும் அவரைக் காணவேண்டுமென்று வாஞ்சித்தனர். ஆகவே இந்த கிரேக்கர்கள் அவரைக் காண விரும்பினர். அவர்கள் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடம் வந்து ''ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்'' என்றனர். 30கிரேக்கர்கள் அவரைக் காண விரும்பினர், ஆனால் அவரைக் காணமுடியவில்லை. ஏனெனில் அவர் மனித சரீரம் என்னும் ஆலயத்தில் வாசமாயிருந்தார். ''தேவன் கிறிஸ்துவுக்குள் வாசமாயிருந்து, உலகத்தை தமக்கு ஒப்புரவாக்கிக் கொண்டார்'' இந்த கிரேக்கர்கள் அவரைக் காணமுடியவில்லை என்று நாம் பார்க்கிறோம். அதன்பின்பு இயேசு உரைத்த வார்த்தைகளைக் கவனியுங்கள்: ''கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்.'' வேறுவிதமாகக் கூறினால் அவர் அப்பொழுது இருந்த முகமூடியில் அவர்கள் அவரைக்கண்டு கொண்டிருக்கவே முடியாது. அவர் அப்பொழுது மானிட சரீரத்தில் திரைமறைக்கப்பட்டிருந்தார். ஆனால் இந்த கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகும் போது, அநேக ஜாதிகளை உற்பத்தி செய்யும். அவர் அந்த காலத்தில் யூதர்களிடம் அனுப்பப்பட்டார். ஆனால் அந்த கோதுமை மணி நிலத்தில் விழவேண்டும். தேவன் மாம்சத்தில் திரையிடப்பட்டு, அவிசுவாசிகளுக்கு மறைக்கப்பட்டு, விசுவாசிகளுக்கு வெளிப்படுத்தப்படுகிறார். 31யோவான் 1ல், ''ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார். அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது'' என்று கூறப்பட்டுள்ளது. ஆதியிலே வார்த்தை இருந்தது. சிந்தனை வெளிப்படையாக கூறப்படுவதே வார்த்தையாகும். அவர் ஆதியில் தேவனாகக் கூட இருக்கவில்லை. ஆங்கிலத்தில் 'தேவன்' (God) என்று அர்த்தமுடைய சொல், ''தொழுகைக்குரிய பொருள்“ என்று அர்த்தம் கொள்ளும். எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது என்று பாருங்கள் நீங்கள் எவரையும் தேவனாக்கிவிடலாம், எதையும் நீங்கள் தெய்வமாக்கிவிடலாம். ஆனால் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் 1-ல், ''ஆதியிலே தேவன்...'' என்று கூறப்பட்டுள்ளது, 'ஏலோகிம்' என்றால் 'தானாகவே ஜீவிக்கிறவர்', என்று பொருள்படும் 'ஏலோகிம்' என்பதற்கும் 'தேவன்', என்னும் சொல்லுக்கும் எவ்வளவு அர்த்த வித்தியாசம் பாருங்கள்! நாம் தானாகவே ஜீவிக்கமுடியாது, நாம் சர்வ வல்லமையுள்ளவர்களாகவோ, எங்கும் பிரசன்னராகவோ, எல்லாம் அறிந்தவராகவோ இருக்க முடியாது. 'ஏலோகிம்' என்னும் சொல் இவையனைத்தையும் அறிவிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது. நாம் அதாக இருக்க முடியாது. நீங்கள் மரத்திலிருந்து உண்டாக்கிக் கொண்ட தெய்வம், அல்லது கட்டிடம் தானாகவே ஜீவிக்கும் ஒன்றல்ல. 32தேவன் ஆதியிலே ஜீவனாக இருந்தார் - நித்தியமானவர் அவருக்குள் தன்மைகள் இருந்தன. அந்த தன்மைகள் வார்த்தையாகி, அந்த வார்த்தை மாம்சமானார். இயேசு மீட்பர். ஒன்றை மீட்பது என்றால், “மறுபடியும் கொண்டு வருதல்'' ஒன்றை மறுபடியும் கொண்டு வரவேண்டுமென்றால், அப்படி கொண்டு வருவதற்கு அது எங்காவது இருந்திருக்க வேண்டும். எனவே எல்லாரும் இதை புரிந்து கொள்ளமுடியாது. ஏனெனில் எல்லோருமே ஆதியில் தேவனுடைய சிந்தையில் இருக்கவில்லை. பாருங்கள்? 33அந்த ஆசாரியர்களைப் பாருங்கள். அவர் என்னவாயிருப்பார் என்று வார்த்தை கூறின விதமாகவே தம்மை அவர் வெளிப்படுத்தினதை அவர்கள் கண்டபோது அது “பெயல்சபூல்'' என்றனர் - அவர்களுடைய சுபாவத்தை அது எடுத்துக் காண்பிக்கிறது. நவீன கருத்து என்னவோ, அது போன்று தான் அதுவும் இருந்தது. ஆனால் அவர் அந்த சிறு வேசியை வாசலில் சந்தித்து, அவள் என்ன செய்தாள் என்பதை எடுத்துரைத்து, அவருடைய மேசியாவின் அடையாளத்தை அவர் வெளிப்படுத்தின போது, அவள் ''ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்”, மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது இவை எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். அவரை அபிஷேகம் பண்ணப்பட்டவராக, மேசியாவாக அவள் அடையாளம் கண்டு கொண்டாள். ஏனெனில் அவர் அதற்கான வேதப் பிரகாரமான தகுதியைப் பெற்றிருந்தார். உங்களால் காணமுடிய வில்லையா? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி ) காகிதத்தின் இரு துண்டுகளும் அங்கு ஒன்றாக இணைந்தன. ''மேசியா வரும்போது...'' 34ஒரு மணியில் பிரத்தியேக ஒலி எழும்ப, அதை வார்ப்பிக்கிறவன் வெவ்வேறு உலோகங்களை ஒரு பிரத்தியேக விகிதத்தில் சேர்த்து வார்ப்பிப்பது போல, தேவன் இதையும் அதையும் சேர்க்க வேண்டியதாயிருந்தது. இயேசு திரும்பிப் பார்த்து அவளிடம், ''உன்னுடைய பேசுகிற நானே அவர்'' என்று கூறின் போது, அவள் அவரை “பெயல்சபூல்” என்று அழைக்கவில்லை, அவள் தண்ணீர் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ''நான் செய்த எல்லாவற்றையும் சொன்ன மனிதனை வந்து பாருங்கள். அவர் மேசியாவல்லவா?'' என்றாள். பாருங்கள்? அவள் வேத வாக்கியத்துடன் இயேசு அவளுக்களித்த அனுபவத்தை இணைத்து பார்த்தபோது, அது அவளுக்கு என்ன செய்தது? அது மேசியாவை உண்டாக்கினது என்று நீங்கள் கவனித்தீர்களா? அவளுடைய பாவம் மன்னிக்கப்பட்டது. ஏனெனில் ஆதியிலேயே அவள் மீட்கப்படக் கூடியவளாயிருந்தாள், அவள் ஆதியிலேயே தேவனுடைய சிந்தையிலிருந்தாள். எனவே யேகோவா என்னவாயிருந்தார் என்றும், என்னவாயிருக்கிறார் என்றும் வெளிப்படுத்தும் வேத வாக்கியத்தை அவள் அறிந்து கொண்ட போது, அது அவளை மீட்டு மறுபடியும் கொண்டு வந்தது. 35இயேசு நோவாவின் செய்தியுடன் வந்து, பேழையையுண்டாக்கி, அதை மிதக்க விட்டிருப்பாரானால், அது கிரியை செய்திருக்காது. நோவா தேவனுடைய ஒரு பாகமாக இருந்தான். அவன் விசித்திரமான வழியில் நடந்து கொண்டான், ஏனெனில் அவன் விசித்திரமானவன். அவனுடைய செய்தியும் விசித்திரமானது. ஏனெனில் அது வெளிப்படுத்தப்படும் வார்த்தையாக இருந்தது. அவன் மோசேயின் செய்தியுடன் வந்திருக்க முடியாது. ஏனெனில் அவன் காலத்தில் அது கிரியை செய்திருக்காது. மோசே வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய ஒரு பாகமாக இருந்தான். அந்த மணி நேரத்திற்கென வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக அவன் இருந்தான். இயேசு அச்செய்தியுடன் வந்திருக்க முடியாது. அவர் அப்படி வருவாரென்று வேதம் கூறவில்லை. அவர் எப்படி வெளிப்படுவாரென்று வேதம் கூறியிருந்ததோ, அதே விதமாக அவர் வெளிப்பட்டார். மீட்கப்படக் கூடியவர்கள் அனைவரும் அதை விசுவாசித்தனர். ஆதியில் அவருடைய தன்மைகளாக (attributes) இருந்தவை மாம்சத்தில் வெளிப்பட்டு, அவர்கள் மீட்கப்படக் கூடியவர்களாகி, தேவனிடம் மறுபடியும் கொண்டு வரப்பட்டனர். ''அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்''. ஏனெனில் அவர்கள் மீட்கப்படக் கூடியவர்கள். ஆதியிலிருந்தே அவர்கள் அவருடைய சிந்தையிலிருந்து, பின்பு வெளிப்பட்டவர்கள். 36இங்கு சற்று நிறுத்திக் கொண்டு (கூடுமானால்), இம்மணி நேரத்துக்குறிய செய்தியை - யேகோவாவின் வெளிப்பட்ட சிந்தைகளை இன்றிரவு நாம் சிந்தித்துப் பார்க்க முடியுமானால்... நமது பெயர்கள் உலகத்தோற்றத்துக்கு முன்பே ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுவிட்டன என்று நாம் அறிவிக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் நம்மால் இரண்டு சாராரையும் காணமுடிகிறது - நான் முன்பு கூறின விதமாக, ஒரு சாராருக்கு மற்ற சாரார் ஏன் வினோதமாகக் காணப்படுகின்றனர் என்று. அது அப்படித் தான் இருக்கும். எக்காலத்தும் அது அப்படித்தான் இருந்து வந்துள்ளது. இனி எப்பொழுதும் அது அப்படித்தான் இருக்கும். அவர் வார்த்தை. வார்த்தை மாம்சமாகி, நம்மிடையே வாசம் பண்ணினார். 37பழைய ஏற்பாட்டின் காலத்திலும் தேவன் வெவ்வேறு ரூபங்களில் ஜனங்களுக்கு பிரத்தியட்சமானார். அவர் தம்மை தகசுத் தோலுக்குப் பின்னால் திரையிட்டு மறைத்துக் கொண்டிருந்தார். தேவன் தமது கிருபாசனத்தில் தகசுத் தோலின் பின்னால் மறைந்து கொண்டிருந்தார். சாலோமோன் தேவாலயத்தை பிரதிஷ்டை செய்த போது, தகசுத்தோல் திரையாக அங்கு தொங்கிக் கொண்டிருந்தது, அவர் அக்கினி ஸ்தம்பத்திலும், மேகமாகவும் இறங்கி வந்து அதற்கு பின்னால் சென்று வெளிப்புற உலகுக்கு தம்மை திரையிட்டு மறைத்துக் கொண்டார், ஆனால் விசுவாசத்தின் மூலம் இஸ்ரவேல் ஜனங்கள் அவர் திரைக்கும் பின்னால் இருக்கிறார் என்பதை அறிந்திருந்தனர். அஞ்ஞான உலகம் என்ன கூறினபோதிலும், அவர் அங்கிருப்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் விசுவாசியோ விசுவாசத்தின் மூலம் அவர் திரைக்குப் பின்னால் இருக்கிறார் என்பதை உணர்திருந்தான். அவர்கள் இரக்கம் பெற்றனர். அவர் அவருடைய கிருபாசனத்தில் இருந்தார். அது ஒரு பெரிய இரகசியமாயிருந்தது. 38பழைய ஏற்பாட்டின் காலத்தில், அந்த தோலுக்குப் பின்னால் செல்லுதல் மரணத்தை விளைவிக்கும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் இப்பொழுதோ அதன் பின்னால் செல்லாமலிருத்தல் மரணத்தை விளைவிக்கும். அக்காலத்தில் அவருடைய மகிமைக்குள் பிரவேசித்தல் மரணத்தை விளைவிக்கும். இப்பொழுது அவருடைய மகிமைக்குள் பிரவேசிக்காமல் தங்கிவிடுதல் மரணத்தை விளைவிக்கும். கல்வாரியில் திரைச்சீலை இரண்டாக கிழிந்த போது, அது அப்படியானது. இப்பொழுது அவருடைய சமுகத்துக்கு அப்பால் இருப்பது மரணத்தை விளைவிக்கும். அக்காலத்தில் அவருடைய சமுகத்தில் பிரவேசிப்பது மரணத்தை விளைவித்தது. பாருங்கள்? அது முன்னும் பின்னும் மாறுகின்றது. நாம் எந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் வேதத்தின் வாயிலாக அறிந்து கொள்ள வேண்டும். 39கல்வாரியில் திரைச்சீலை இரண்டாக கிழிந்த போது கிருபாசனம் வெளிப்படையான காட்சிக்கு வந்தது. என்ன நேர்ந்தது? அது இரத்தம் சொட்டினதாய் கல்வாரியில் தொங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் இரத்தத்தை கொண்டு சென்று பிரகாரத்திலும் கிருபாசனத்தின் மேலும் தெளித்து அதை சுத்திகரித்தனர். ஆனால் தேவனோ தமது மகத்தான மின்னல் வல்லமையினால் அந்த தகசுத்தோல் திரைச்சீலையை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழித்தார். அப்பொழுது கிருபாசனம் வெளிப்படையான காட்சிக்கு வந்தது. உண்மையான தேவ ஆட்டுக்குட்டி - வெளிப்படையான காட்சியாக, அந்த உண்மையான கிருபாசனமாகிய, கல்வாரியில் தொங்கிக் கொண்டிருந்தார், நம்மை நன்கு அறிந்து கொள்ளவும், நாம் அவரை நன்கு அறிந்து கொள்ளவும், மனிதனாக வெளிப்பட்டு, நம்மில் ஒருவராக ஆகி, தேவன் கிரயத்தை செலுத்தினார். பலி செலுத்தப்பட்ட அந்த நாளிலே கிருபாசனம் இஸ்ரவேலர் அனைவருக்கும் வெளிப்படையான காட்சிக்கு வந்தது. 40ஆனால் அந்தோ! சபை பிதாக்களின் பாரம்பரியங்கள், உண்மையான கிருபாசனத்தை ஜனங்கள் காணக்கூடாதபடிக்கு, அதை திரையிட்டு, மறைத்தன. அவர்கள் மாத்திரம் வேதத்தை அறிந்திருப்பார்களானால், ஒவ்வொரு துணிக்கையும் சீனனின் காகிதத் துண்டுகளைப் போல் ஒன்றாக இணைந்திருக்கும், பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதை அவர்கள் கண்டிருப்பார்கள். அவர்களுக்கு வேதாகமம் சரியானபடி போதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் கிருபாசனத்தைக் கண்டிருப்பார்கள். மோசே இங்கு சொன்னது போல் இந்நாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின் மேல் இருக்கிறது, அவர்கள் அதைக் காண்பதில்லை. 41ஆனால் அவர் தேவன் - பாடுபட்டு, பலியாக தம்மை ஒப்புக் கொடுத்தவர். அவரே முழு காட்சியில் நின்று கொண்டிருந்த உண்மையான கிருபாசனம். நாம் இந்தப் பாடலைப் பாடுகின்றோம்: திரைச் சீலையை அவர் இரண்டாக கிழித்த முதற்கொண்டு அதோ! முழு காட்சியிலுள்ள அவரை நோக்கிப் பாருங்கள் மகத்தான ஜெயங்கொண்டவர் அங்குள்ளார். பாருங்கள், அவர் சபையோருக்கு முன்பாக கிருபாசனமாக, தெளிவான காட்சியாக, தொங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களோ, ஜனங்கள் பொதுவாகக் கொண்டிருந்த கருத்தைக் கொண்டவர்களாய்... ஆண்களே, பெண்களே, இக்கன்வென்ஷனுக்கு வந்துள்ள பிரதிநிதிகளே, பட்சபாதமின்றி இதைக் கூற விரும்புகிறேன். இன்றைய சபை பிதாக்களின் பாரம்பரியங்கள் இன்றைய காட்சியை அநேக ஜனங்களிடமிருந்து மறைத்துவிட்டன என்று கருதுகிறேன். தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ள விதமாகவே இந்த கடைசி நாட்களில் பரிசுத்தஆவி வந்து, திரைச்சீலையும் இரண்டாகக் கிழிந்துவிட்ட போதிலும், அநேகர் இன்னும் பிதாக்களின் பாரம்பரியங்களில் நிலை கொண்டிருக்க முயல்கின்றனர். அதனால் தான் அவர்களால், உண்மையான சபை பெற்றுள்ள அளவில்லா சந்தோஷம், சமாதானம் இவைகளைக் காணமுடிவதில்லை. ஆயினும் விசுவாசிக்கிறவர்களுக்கு அது வெளிப்படையான காட்சியாக அமைந்துள்ளது. அவர் வார்த்தையை, இந்நாளுக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள வார்த்தையை மறைத்தார். 42பாரம்பரியங்கள் ஒரு திரையை உண்டாக்கிக் கொண்டன. அற்புதங்களின் நாட்கள் முடிவடைந்துவிட்டதாக அவர்கள் எண்ணுகின்றனர். நான் வாழும் அரிசோனாவிலுள்ள டூசானில் ஒரு அருமையான, நாகரீகமான மனிதன் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது எனக்கு ரமாதாவில் கூட்டம் இருந்தது. நான் அங்கு வர்த்தகர் கன்வென்ஷனில் பேசினேன். அங்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இறங்கி வந்து மகத்தான அற்புதங்களைச் செய்தார். இந்த கிறிஸ்தவ சான்றோர் என்னிடம் வந்து (அவர் ஒரு சபையின் போதகர், நல்லவர்), “சகோ. பிரன்ஹாமே, அப்போஸ்தல காலம் முடிவுற்ற பின்பும், நீங்கள் அப்போஸ்தல காலத்தை ஜனங்களுக்கு மிகைப்படுத்திக் காண்பிக்க முயல்கிறீர்கள்'' என்றார். அப்பொழுது நான் “சகோதரனே, நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன், அப்போஸ்தல காலமானது எப்பொழுது முடிவுற்றது என்று வேதாகமத்தில் எனக்கு காண்பியுங்கள்'' என்றேன். மேலும் நான் அப்போஸ்தல காலம் பெந்தெகொஸ்தே நாளில் துவங்கினது, மேலும் அது... பெந்தெகொஸ்தே நாளிலே பேதுரு 'வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று கூறினான். எப்பொழுது அது நின்று போனது? தேவன் இன்னுமாக வரவழைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், அப்படியானால் அப்போஸ்தல காலமானது இன்னும் செயலில் இருக்கின்றது'' என்று கூறினேன். 43அப்படித்தான் ஜனங்கள் அநேகரை, அன்று போல் இன்றும், பெரியோர்களின் பாரம்பரியங்களினால் குருடாக்கப் பார்க்கின்றனர். ஜனங்கள் ஏன் இவ்வளவு சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கின்றனர் என்பதை நீங்கள் காணத் தவறுகின்றீர்கள். இந்த கன்வென்ஷன்கள் மற்றவர்களுக்கு வினோதமாய் காணப்படலாம். ஆனால் இவர்கள் தடைகளை முறித்து, திரைகளை கிழித்து, தேவனுடைய சமுகத்தில் சென்றிருப்பதால், இம் மணிநேரத்துக்கான வாக்குத்தத்தம் ஜனங்கள் முன்னிலையில் வெளிப்படுவதை அவர்கள் காண்கின்றனர். தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளதை அவர்கள் காண்கின்றனர். 44யோவேல் 2:28-ல், கடைசி நாட்களில் ஜனங்களின் மேல் பின்மாரி பொழியும் என்று அவர் வாக்களித்துள்ளார். அங்கு உபயோகிக்கப்பட்டுள்ள கிரேக்க சொல் 'கினாஸ்' (kenos) என்று நினைக்கிறேன். அப்படியென்றால் தம்மை வெறுமையாக்கினார் என்று பொருள். நாம் வழக்கமாக கூறுவது போல், யாரோ ஒருவருக்குள் ஏதோ ஒன்று இருந்து அவர் மனம் விட்டுப்பேசி அதை மற்றவர்களுக்கு அறிவித்தார் என்னும் அர்த்தம் அல்ல. அவர் தம்மை ஊற்றி வெறுமையாக்கினார். அவர் முன்பிருந்ததிலிருந்து இப்பொழுதுள்ளதற்கு தம்மை மாற்றிக் கொண்டார். ஆனால் அவருடய தன்மையை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. பெந்தெகொஸ்தே நாளன்று அவர் மனுஷ குமாரனாயிருந்ததிலிருந்து தேவனுடைய குமாரனாக தம்மை மாற்றிக் கொண்டார். அவர் அப்பொழுது ஜனங்களுடன் இருக்க வராமல், ஜனங்களுக்குள் இருக்க வந்தார். அதே தேவன் இந்த மகத்தான காலத்தில் தமது ஊழியத்தை தொடர்ந்து செய்ய அவ்விதம் வந்தார். 45ஒரு நாள் வரும், அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனால் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும் என்று அவர் வேதத்தில் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார். புவியியலின்படி, சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றது. ஆனால் அது அதே சூரியன் தான். (Sun) குமாரன் (S-O-N) வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின்படி கிழக்கத்தியராகிய இஸ்ரவேலுக்கு தம்மை வெளிப்படுத்தின போது, நமக்கு இருள் உண்டாயிருந்தது. சீர்திருத்தக்காரர்களின் மூலம் நமக்கு சிறிது வெளிச்சம் உண்டாகி, சபைகளும் ஸ்தாபனங்களும் ஏற்படுத்தப்பட்டு, அதில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாயிருந்தது. அவர்கள் மரித்தோரை அடக்கம் பண்ணி, குழந்தைகளை முத்தமிட்டு, வயது வந்தோர்க்கு விவாகம் செய்து, இப்படியாக சபையில் இருந்து வந்தனர். ஆனால் ''சாயங்கால நேரத்தில் வெளிச்சமுண்டாகும்'' என்று அவர் கூறியுள்ளார். வேத வாக்கியம் எதுவும் தவறாயிருக்க முடியாது. பெந்தெகொஸ்தே நாளன்று தம்மை ஊற்றின (kenos) அதே குமாரன் (S-o-n) சாயங்கால நேரத்தில் அதையே செய்வதாக வாக்களித்துள்ளார். பாருங்கள்? அது வாக்களிக்கப்பட்ட விதமாகவே உள்ளது. கிழிக்கப்பட்ட இரு காகிதத் துண்டுகளையும் ஒன்றாக இணையுங்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றும், அவர் என்ன வாக்களித்துள்ளார் என்பதையும் கவனியுங்கள். அப்பொழுது நாம் எங்கிருக்கிறோம் என்பதை கண்டு கொள்வீர்கள். அவைகளை ஒன்றாக இணைத்துப் பாருங்கள். அப்பொழுது இந்த மகத்தான மற்றும் வல்லமையானவர் திரை நீக்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ள இந்த மகத்தான காரியங்கள் நிறைவேறுவதை காணக் கூடாதவாறு பாரம்பரியங்கள் ஜனங்களின் கண்களைக் குருடாக்கியுள்ளன. 46அக்கினி புகைந்த மலையிலிருந்து மோசே இறங்கி வந்த போது... எவ்வளவு அருமையான விளக்கம்! மோசே எகிப்துக்குச் சென்று சபை பிதாக்களிடம், தேவனாகிய கர்த்தர் அவனை ''இருக்கிறேன்“ என்னும் நாமத்தில் சந்தித்ததாகக் கூறினான். அந்த நாமம் நிகழ்காலம். இருந்தேன் என்றோ , 'இருப்பேன்' என்றோ அல்ல, 'இருக்கிறேன்' எப்பொழுதும் மாறாதவர். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவர் நிகழ்காலம். அது, ”இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று எபி. 13:8-ல் கூறப்பட்டுள்ளதுடன் ஒத்துப் போகின்றது. 47இன்றைக்கும் அது தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ள வார்த்தையாகவே திகழ்கின்றது. சபையோர் வார்த்தையுடன் - இக்காலத்தின் அனுபவங்களுடன் - புறாவின் வாலைப் போல் வெகுவாக இணையும்போது அது இந்த நாளின் அனுபவமாகும். ''சீர்திருத்தக்காரர்கள் அதை பெற்றிருந்தனர்“ எனலாம். ஓ, ஆனால் இது மற்றொரு நாளாகும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாளைக் கவனியுங்கள் அவர் பூமியின் மேல் வந்திருந்த நாட்களில் மோசேயோ அல்லது வேறெந்த தீர்க்கதரிசியோ வந்த விதத்தில் அவரால் வரமுடியவில்லை. ஏனெனில் அவ்வாறு தீர்க்கதரிசனம் உரைக்கப்படவில்லை. இக்கடைசி நாட்களிலும் அது இந்த விதமாக வரவேண்டுமென்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. எனவே இது லூத்தரின் எழுப்புதல் என்னும் உருவில் வரமுடியாது. வெஸ்லியின் எழுப்புதல் என்னும் உருவில் வரமுடியாது. இது திரும்ப அளிக்கப்படும் (Restoration) மணிநேரம் - மூல குமாரன் (Son) வெளிச்சத்துக்கு இது வரவேண்டிய நேரம். ஓ, இதற்கு ஆதாரமாக எத்தனையோ வேத வாக்கியங்களை எடுத்துரைக்க முடியும். வேத பண்டிதர்களே, நீங்கள் உலகத்தின் எந்த பாகத்திலிருந்து வந்திருப்பினும், இது உண்மையென்று உங்களுக்குத் தெரியும். அது வாக்குத்தத்தம். அதுதான் ஜனங்களை வினோதமானவர்களாகச் செய்கிறது. நீங்கள் பரிகாசமாக அவர்களை 'வினோதமானவர்கள்' (odd balls) என்று அழைக்கிறீர்களே, அதுதான் அவர்களை அவ்வாறு செய்கிறது. ஏனெனில் அவர்கள்... பாரம்பரியம் என்னும் திரை நீக்கப்பட்டு, அவர்கள் காண்கின்றனர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அது தேவனுடைய வாக்குத்தத்தம். அதற்கு விரோதமாய் நாம் செல்லமுடியாது. ஏனெனில் வேத வாக்கியங்களை நாம் தவறாக்க முடியாது. ஆம், அவர் ஜனங்களுக்குள் தம்மை ஊற்றுவதாக வாக்களித்துள்ளார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 48மோசே எகிப்துக்குச் சென்று கர்த்தர் அவனை சந்தித்ததை பிரகடனம் செய்த பிறகு, பிதா சீனாய் மலையின் மேல் அதே அக்கினி ஸ்தம்பமாக வந்து அந்த மலையை பற்றியெரியச் செய்து, அவனுடைய செய்தியை உறுதிப்படுத்தினார். அவர் வாக்குத்தத்தம் அளித்த அந்த மனிதனை கவனித்தீர்களா? அவனை அவர் வார்த்தையுடன் அனுப்பினார். அவன் பத்து கட்டளைகளைப் பெற்றுக் கொண்டான். அந்த கட்டளைகளைப் பெற்றுக் கொள்ள அவன்... அந்த கட்டளைகள் தேவனுடைய வார்த்தை. வார்த்தை இப்பொழுதும் ஜனங்களிடம் நேரடியாக வருவதில்லை. வார்த்தை எப்பொழுதும் தீர்க்கதரிசியிடம் வருகிறது. அவன் அந்த மணி நேரத்தின் தீர்க்கதரிசியாக விளங்கினான். இயேசு வார்த்தையாயிருந்தார். யோவான் ஸ்நானன் ஒரு தீர்க்கதரிசி. இயேசு தண்ணீரில் அவனிடம் வந்தார். ஏனெனில் வார்த்தை எப்பொழுதுமே தீர்க்கதரிசியிடம் வரத் தவறியதில்லை. 49எனவே மோசேயிடம் கட்டளைகளாகிய வார்த்தை வந்தது. அவன் அதை பெற்றிருந்தான். வார்த்தை ஜனங்களுக்கு அளிக்கப்பட்டு, அது வெளிப்படும் முன்பே, மோசே தன் முகத்தின் மேல் முக்காடு போட்டுக் கொள்ள வேண்டியதாயிருந்தது. ஏனெனில் வார்த்தை அப்பொழுது முழுவதுமாக வெளிப்படவில்லை. அங்கு இடி முழங்குவதை ஜனங்கள் கேட்டு ஏதோ நடந்தது என்று மாத்திரம் அறிந்திருந்தனர். ஆனால் அது என்னவென்று அப்பொழுது அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள், ''மோசே எங்களுடன் பேசட்டும், தேவன் பேச வேண்டாம்'' என்றனர். கர்த்தர், ''சரி, அப்படியே செய்கிறேன். இன்று முதல் நான் இப்படி பிரத்தியட்சமாக மாட்டேன், நான் அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்புவேன். என் தீர்க்கதரிசியின் மூலம் நான் பேசுவேன்'' என்றார். 50மாம்சப் பிரகாரமான பிரமாணங்களை பெற்றிருந்த மோசே தன் முகத்தை முக்காடு போட்டு மறைத்துக்கொள்ள வேண்டிய நிலை (ஏற்பட்டால்) பவுல் நமக்கு 2 கொரிந்தியரில் வெளிப்படுத்தித் தந்துள்ள விதமாக ஆவிக்குரியது இன்னும் எவ்வளவு அதிகமாக மகிமையானதும், அது வெளிப்படும் முன்பே அவிசுவாசிகளுக்கு திரையிட்டு மறைக்கப்பட வேண்டியதாயிருக்கும்! இன்னும் எவ்வளவு அதிகமாக அவர்கள் உங்களை ஏளனம்... மோசே வினோதமானவன். அப்படியிருக்க திரையைக் கிழித்து, அக்கினி ஸ்தம்பம் உள்ள இடத்திற்கு சென்று, ஆசீர்வாதத்துடன் திரும்பி வந்துள்ள உங்களை அவர்கள் இன்னும் எவ்வளவு அதிகமாக ஏளனம் செய்ய வேண்டும்? நீங்கள் இப்பொழுது திரையிடப் பட்டிருக்கிறீர்கள். ஜனங்கள் அதைக் காண முடியாது. அவர்கள் அதை புரிந்து கொள்ள முடியாது. மாம்சப் பிரகாரமானதே மகிமையுள்ளதாயிருந்தால், இயற்கைக்கு மேம்பட்டது இன்னும் எவ்வளவு அதிகமாக மகிமையுள்ளதாயிருக்கும்! முடிவுள்ள அதுவே மகிமையுள்ளதாயிருக்குமானால், முடிவற்ற இது இன்னும் எவ்வளவு மகிமையுள்ளதாயிருக்கும்! 51ஆனால் அது இன்னும் திரையிடப்பட்டுள்ளது. விசுவாசிக்கல்ல, அவிசுவாசிக்கு. அவனால் அதைக் காணமுடியாது. தேவன் எப்பொழுதுமே அவிசுவாசிக்கு தம்மை திரையிட்டு மறைத்துக் கொள்கிறார். பாரம்பரியங்கள் அதை மறைத்து விடுகின்றன. அன்று அவர்கள் செய்தது போல், இன்று இவர்கள் செய்கின்றனர். இப்பொழுது நாம் கொண்டிருப்பது அந்த ஆவிக்குரிய திரையாகும், இயற்கையான திரை அங்கே இருந்தது. அவை எழுதப்பட்ட வார்த்தையோடு வருகின்ற தீர்க்கதரிசியினால் உறுதிப்படுத்தப்படுகின்றது, தீர்க்கதரிசனம் உரைப்பவன், அவன் எழுதப்பட்ட வார்த்தையுடன் வந்து அதற்கு விளக்கம் அளித்து தெளிவாக்குகிறான். வார்த்தை இருக்கின்றது என்று அவர்களுக்குத் தெரியும், ஆனால் அதன் அர்த்தம் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. மோசே அதை தெளிவாக்கினான். அவன், ''கட்டளைகள் இதை கூறுகின்றன. அதனால் தான்...'' என்றான். அதை அவன் தெளிவுபடுத்தினான். அது தெளிவாக்கப்படும் முன்பு திரையிடப்பட்டிருந்தது. 52இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. அது ஜனங்களுக்கு வெளிப்பட்டு தெளிவாக்கப்படும் முன்பு, அது திரையிடப்பட்டுள்ளது - தேவன், வல்லமையுள்ள தேவன் - வார்த்தையாகிய மானிட மாம்சத்தில் திரையிடப்பட்டிருக்கிறார்: கவனியுங்கள், இது அவிசுவாசிக்கு மறைக்கப்பட்டு விசுவாசிக்கு வெளிப்படுத்தப்படுகிறது என்று நாம் காண்கிறோம். கவனியுங்கள், மோசே தனியாக அக்கினி ஸ்தம்பத்துக்குள் பிரவேசிக்க வேண்டியதாயிருந்தது. யாரும் அவனுடன் கூட செல்ல முடியவில்லை. அது நமக்கு என்ன காண்பிக்கிறது? ஒரு பெந்தெகொஸ்தே கூட்டத்தைச் சேர்ந்து கொள்வதால் இதற்குள் நீங்கள் வர முடியாது என்று. பாருங்கள்? அவர் அதை ஒரு குழுவுக்கு வெளிப்படுத்தவில்லை. தனிப்பட்ட நபர் ஒருவருக்கு மாத்திரமே அதை வெளிப்படுத்தினார். இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. நீங்கள், ''நான் இந்த சபையைச் சேர்ந்தவன்'' என்று சொல்கின்றீர்கள். ஆனால் அது கிரியை செய்யாது. மோசேயை பாவனை செய்த எவருக்கும் மரணம் தான் அது போன்று தான் இன்றைக்கும், இதை பாவனை செய்ய முயல்பவர்க்கு ஆவிக்குரிய மரணமே. 53இன்றைக்கு குழுக்களிலிருந்து மாம்சப்பிரகாரமான ஒப்பிடுதல்களும் (Carnal Comparisons), பாவனைகளும் எழுவதை நாம் காண்கிறோம் - அவ்வாறு இருப்பது போல் பாவனை செய்து, அதே சமயத்தில் வித்தியாசமான வாழ்க்கை நடத்துகின்றனர்; மது அருந்துதல், புகை பிடித்தல் போன்றவை; பெண்கள் தங்கள் விருப்பப்படி உலகத்தாரைப் போல் வாழ்க்கை நடத்துதல், வீட்டில் இருந்து கொண்டு தொலைகாட்சியை பார்த்தல், இவ்வாறு உலக காரியங்களில் ஈடுபட்டு அதே சமயத்தில் தங்களைப் பெந்தெகொஸ்தேயினர் என்று அழைத்துக் கொள்ளுதல். உண்மையான ஒன்றை அவர்கள் பாவனை செய்கின்றனர். அவர்களுக்கு இன்னும் அது வெளிப்படவில்லை. அது வெளிப்படும்போது, மகிமையுள்ளதாயிருக்கும். நீங்கள் அதற்குள் பிரவேசிக்கும் போது ஏதோ ஒன்று இப்படிப்பட்ட காரியங்களை உங்களிடமிருந்து எடுத்துப் போடுகின்றது. நீங்களே ஒரு திரையாகிவிடுகின்றீர்கள். ஆனால் அதை பாவனை செய்வதால் எவ்வித பயனுமில்லை. அது மரணத்தை விளைவிக்கும். 54மோசே முக்காடு போட்டு திரையிடப்பட்டிருந்தான். அவன் ஜனங்களுக்கு ஜீவிக்கிற வார்த்தையாக இருந்தான். இன்றைக்கும் திரையிடப்பட்டுள்ள ஜனங்கள் அவ்வாறே உள்ளனர். அவர்கள் சகல மனிதராலும் வாசிக்கப்பட்டு எழுதப்பட்ட நிருபங்களாயுள்ளனர். ஒரு புது நிருபமல்ல. ஏற்கனவே எழுதப்பட்ட நிருபம் வெளிப்படுகின்றது. தேவனுடைய வார்த்தையையும், தேவன் மாம்சமான யாவர் மேலும் தமது ஆவியை ஊற்றிக் கொண்டிருக்கிறார் என்று இந்நாளுக்கென அளிக்கப்பட்ட வாக்குத்தத்தத்தையும் விசுவாசிப்பவர்களே எழுதப்பட்ட நிருபங்கள். ஒருவன் அதை மாம்சப்பிரகாரமாக பாவனை செய்ய முயலும்போது, அது அவனையே தாக்குகிறது. நீ யாரென்று உன் வாழ்க்கை உன்னை காட்டிக் கொடுத்து விடும். 55ஒரு சமயம் ஒரு பையன் தொல்லையில் சிக்கிக் கொண்டான். அவன் நல்லவன் தான். நீதிபதி, ''உன்னைக் குற்றவாளியென்று தீர்க்கிறேன். உனக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன்'' என்றார். அவன், “என் வழக்கை நானே வழக்காட வேண்டும். அதற்கான தஸ்தாவேஜுகளை நான் பரிசீலிக்க வேண்டும்'' என்றான். நீதிபதி, ''உனக்கு தஸ்தாவேஜு எதுவுமில்லை. நீ புரிந்த குற்றம் தான் உன் தஸ்தாவேஜு'' என்றார். இன்றைக்கும் அப்படித்தான் உள்ளது. சபையானது முன்னேற வேண்டிய விதத்தில் முன்னேறாததே அதன் தஸ்தாவேஜு. அது பொய்யுரைக்கிறது. நாம் இன்னும் அதிகமாக நம்மை அர்ப்பணிக்கவேண்டும். நாம் தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றையும் விசுவாசிக்க வேண்டும். அந்த வார்த்தை நமக்கு தத்ரூபமாகும் வரைக்கும் நாம் தேட வேண்டும். பாருங்கள்? நாம் பிரவேசிக்காத படி நம்மை தடை செய்வதே நமது தஸ்தாவேஜு. 56ஆனால், ஒரு சமயத்தில் (இந்த காரியத்தை உங்களுக்கு தெளிவாக்க) அதே நீதிமன்றத்தில், அந்த பையனுக்கு நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த பணமில்லை. அவனால் அதை செலுத்த முடியவில்லை. அது ஆயிரக்கணக்கான டாலர்கள், ஆனால் அவனுக்கு ஒரு மூத்த சகோதரன் இருந்தான். அவன் அபராதத்தை இளையவனுக்காக கட்டித் தீர்த்துவிட்டான். நமக்கும் தேவனுடைய குமாரனாகிய இயேசு என்னும் மூத்த சகோதரன் இருக்கிறார். அவர் நமக்காக கிரயத்தை செலுத்த வந்தார் என்பதை நாம் விசுவாசித்து அவருடன் திரைக்குப் பின்னால் நாம் பிரவேசிப்போமானால் அவர் நம்முடைய மோசே ஆவார். இயேசு இன்று நமக்கு மோசேயாக இருக்கிறார். திரையாகிய மோசே, ஜனங்களுக்கு ஜீவிக்கிற வார்த்தையாக இருந்தான். திரையிடப்பட்டுள்ள இயேசு இன்று ஜனங்களுக்கு ஜீவிக்கிற வார்த்தையாக இருக்கிறார். அந்த சபையில் இருக்கின்ற இயேசு பரிசுத்த ஆவி - தேவனுடைய குமாரன் - ஜனங்களுக்குள் இருந்து கொண்டு, இன்றைக்கான வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதன் மூலம் வார்த்தையை ஜனங்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அன்று நடந்தது அப்படியே இன்று நடக்கின்றது. மோசே இதை முழு உலகிற்கும் வெளிப்படுத்தவில்லை. யாத்திரையில் செல்ல வேண்டியவர்களுக்கு மாத்திரமே இதை வெளிப்படுத்தினான் என்பது ஞாபகமிருக்கட்டும் - ஒரு பிரத்தியேக மக்கள் குழுவிற்கு அவர்கள் தாம் எகிப்தை விட்டு வெளிவந்து யாத்திரையை மேற்கொண்டவர்கள். இன்றைக்கு பரிசுத்த ஆவி, “தெய்வீக சுகமளித்தல் என்பது கிடையாது'' என்று சொல்பவர்களை நோக்கி... 57அன்றொரு நாள் ஒரு மருத்துவர் ஒரு ஸ்திரீயைப் பற்றி விசாரிப்பதற்காக என்னை அழைத்தார்... ஓ, நான்கு ஐந்து நோயாளிகள் மரணத் தருவாயில் இருந்தனர். அவர்கள் சில மணி நேரம் மாத்திரமே உயிர் வாழ்வார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை சுகப்படுத்தினார். அந்த மருத்துவர் என்னிடம், ''அது எப்படி முடியும்? அது நான் சிகிச்சையளித்திருந்த நோயாளியாற்றே“ என்றார். நான், “அது முன்பு, இப்பொழுது அது தேவனுடையது. அது தேவனுடைய பொறுப்பாகிவிட்டது'' என்றேன். பாருங்கள். எனவே தேவன், பாவனை செய்பவர்கள், ஸ்தாபனங்களைச் சேர்ந்து கொள்ள முயல்பவர் ஆகியோரின் மாம்சத் திரையின் பின்னாலிருக்கும் ஜனங்களை யாத்திரைக்கு வெளியே வரும்படி அழைக்கிறார் - மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்களிலிருந்து மாத்திரமல்ல, பெந்தெகொஸ்தே சபைகளிலிருந்தும் கூட. அது தனிப்பட்ட நபரின் விவகாரம். அது உங்களுக்கும் தேவனுக்கும் இடையேயுள்ள விஷயம். நீங்கள் தனிப்பட்டவர்களாக உள்ளே செல்ல வேண்டும். உங்கள் குழு அல்ல உங்கள் சபையல்ல, அல்லது உங்கள் போதகரல்ல, நீங்கள் தான் தனிப்பட்ட விதத்தில் உள்ளே செல்ல வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். 58மோசேயின் வேறொரு விசேஷ குணத்தை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். அவன் தீர்க்கதரிசியாக, மகத்தான மனிதனாக, இருந்தபோதிலும், அவன் வார்த்தையுடன் வெளியே வந்தபோது, அவன் மாறியிருந்ததை ஜனங்கள் பார்த்தனர். அவனுக்கு ஏதோ ஒன்று அங்கு நிகழ்ந்தது. அந்நேரத்துக்கான உறுதிப்படுத்தப்பட்ட வார்தையுடன் - கட்டளைகளுடன் - அவன் வெளியே வந்தபோது, அவன் மாறின ஒருவனாக இருந்தான். அவ்வாறே நீங்களும், இத்தகைய கூட்டங்களைக் கண்டு கேலி செய்யும் மானிட திரைக்குப் பின்னாலிருந்து வெளியே வரும்போது; தெய்வீக சுகமளித்தலைக் கண்டு இடறி, ''அற்புதங்களின் காலம் முடிவடைந்துவிட்டது'' என்று கூறுபவர்களை விட்டு வெளிவரும்போது மாறினவர்களாக இருப்பீர்கள். அந்த மானிட திரையின் பின்னாலிருந்து - பாரம்பரியம் என்னும் திரையின் பின்னாலிருந்து - வெளியே வந்துள்ளீர்கள். அப்பொழுது உங்களுக்கு ஏதோ நிகழ்ந்துள்ளது என்று ஜனங்கள் கண்டு கொள்வார்கள். 59நமது மதிப்பிற்குறிய சகோதரன் ஜிம் பிரவுனைப் போன்று. பிரஸ்பிடேரியன்களில் அநேகர் அவருக்கு ஏதோ நேர்ந்தது என்பதை கண்டு கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் பாரம்பரியம் என்னும் திரையின் பின்னாலிருந்து வெளிவந்தார். ஜனங்களிடம் அவர் ஏதா ஒன்றைக் கண்டார்; அது அவரைக் கவர்ந்தது. அவர் அந்த திரையின் பின்னாலிருந்து வெளியே வந்தார்... நீங்களும் அந்த திரைக்குப் பின்னாலிருந்து வெளிவரும் போது, ஜனங்களின் முழு காட்சியில் வருவீர்கள். உங்களுக்கு ஏதோ நேர்ந்தது என்று அவர்கள் கண்டுகொள்வார்கள், வார்த்தையானது அவிசுவாசிக்கு திரையிடப்பட்டுள்ளது, ஆனால் விசுவாசிக்கோ அது முழு காட்சியில் வருகிறது. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்''. 60அந்த காலத்தில் தேவன் ஒரு மனிதனுக்குள் - தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் - இருந்தார். அதை நாம் விசுவாசிக்கிறோம். அவர் தீர்க்கதரிசி மாத்திரமல்ல, அவர் ஒரு சாதாரண மனிதனல்ல, சாதாரண மானிடன் அல்ல. அது தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்தல் - ஒரு மனிதனுக்குள் தேவன் தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக ஒரு மனிதனுக்குள் வாசம் செய்தது. ஒரு மனிதனுக்குள் தேவன். ஆனால் இப்பொழுதுதோ தேவன் மனிதர்களுக்குள் வாசம் செய்கிறார். பார்த்தீர்களா? தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப் பிரகாரமாக ழுழு சபைக்குள் வாசம் செய்து, அதன் மூலம் தேவன் தம்மை வெளிப்படுத்தி, தமது வார்த்தையை நிறைவேற்றுகிறார். 61ஒவ்வொரு காலத்திலும் தேவன் தம் மீது தோலைப் பெற்றிருந்தார் என்று நாம் காண்கிறோம். பாருங்கள்? தேவன் திரைக்குப் பின்னால் மறைக்கப்பட்டிருந்தார். தென் பாகத்தில் நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. ஒரு கிறிஸ்தவ குடும்பம் அங்கிருந்தது. அவர்கள் தேவனை, விசுவாசித்தனர். தேவன் எல்லா தீங்கினின்றும் அவர்களைப் பாதுகாக்கிறார் என்று அவர்கள் விசுவாசித்தனர் - அவர் நிச்சயம் அப்படி செய்கிறார். அவர்களுடைய குடும்பத்தில் ஏழு அல்லது எட்டு வயது கொண்ட சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் ஞாயிறு பள்ளிக்கு செல்வது வழக்கம். அவன் மிகவும் நல்ல பையன். ஆனால் அவனுக்கு புயல் என்றால் அதிக பயம் - முக்கியமாக மின்னல் அடிக்கும்போது. 62அன்றொரு நான் இதை போதகர் ஒருவரிடம் கூறிக் கொண்டிருந்தபோது - இந்த மனிதன் சுகம் பெற்றார் என்னும் செய்தி அறிந்த போது - அந்த போதகர், “சகோ. பிரன்ஹாமே, அவர்கள் உம்மை தேவனாக்கிவிடுகின்றனர்'' என்றார். அவர் குற்றம் கண்டு பிடிப்பவர் (Critic). எனவே அவரைப் புண்படுத்தாத விதத்தில் இதைக் கூற வேண்டுமெனக் கருதி, ''அது வேதத்தின் கருத்திலிருந்து மிகவும் அப்பாற்பட்டதா?'' என்று கேட்டேன். பாருங்கள்? நான், “இல்லை, ஏனெனில் இயேசுவே தீர்க்கதரிசிகளை தேவர்கள் என்று அழைத்துள்ளார்” என்றேன். பாருங்கள்? ''அது உண்மை. தேவன்...'' அவர்கள், ''நீர் தேவனுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள முயல்கின்றீர்'' என்கின்றனர். அது மிகவும் அப்பாற்பட்டதல்ல. அதுதான் அது. அது முற்றிலும் அதுவே! தேவன், அவர் வாக்களித்தபடியே, மாம்சத்தில் வெளிப்பட்டார். 63அந்த சிறு குடும்பம்... இந்த சம்பவத்தை அந்த போதகரிடம் கூறினேன் (அது இப்பொழுது என் நினைவுக்கு வருகிறது). ஒரு இரவு புயல் அடித்தது. தாய் அந்த சிறுவனிடம், “மகனே, மேலறையில் சென்று படுத்துக்கொள்'' என்றாள். அவன், ''அம்மா, எனக்கு பயமாயிருக்கிறது'' என்றான். தாய், “உன்னை எதுவும் தீங்கு செய்யாது. மேலே சென்று படுத்துக்கொள்'' என்றாள். அந்த சிறுவன் சென்று படுத்துக் கொண்டான். மின்னல் ஜன்னலைச் சுற்றும் அடித்தது. சிறுவன் மிகவும் பயந்தான். அவன் போர்வையினால் முகத்தை மூடிக் கொண்டான். இருந்தபோதிலும், மின்னல் ஜன்னலின் மேல் அடிப்பதை அவனால் காணமுடிந்தது. இடியிடிப்பதையும் அவன் கேட்டான். அவன், ''அம்மா?'' என்று கூப்பிட்டான். அவள், “என்ன வேண்டும், மகனே?'' என்று கேட்டாள். அவன், “இங்கு வந்து என்னுடன் படுத்துக் கொள்ளுங்கள்'' என்று கெஞ்சினான். அவள் படியேறி சென்று - உத்தமமான எந்த தாயும் அவ்விதம் செய்வாள் - அவனைத் தன் கரங்களில் அணைத்து, ''சிறியவனே, உன்னுடன் சற்று பேச விரும்புகிறேன்'' என்றாள். அவன், ''சரி, அம்மா“ என்றான். அவள், “இதை நீ மனதில் கொள்ளவேண்டும். நாம் ஒழுங்காக ஆலயத்திற்கு செல்கிறோம், வேதத்தைப் படிக்கிறோம், ஜெபிக்கிறோம். நாம் ஒரு கிறிஸ்தவ குடும்பம். நாம் தேவனை விசுவாசிக்கிறோம். புயலிலும் மற்றெல்லா துன்பங்களிலும் தேவன் நம்மை பாதுகாக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம்'' என்றாள். அவன், “அம்மா, அதை நான் முற்றிலும் விசுவாசிக்கிறேன். ஆனால் மின்னல் அடிக்கும் போது, தோலை தம் மீது கொண்டுள்ள ஒரு தேவன் எனக்கு தேவையாயுள்ளது” என்றான். 64எனவே, அந்த சிறுவன் மாத்திரமல்ல, நாமெல்லாருமே, அப்படி எண்ணுகிறோம். நாம் ஒன்று கூடும் போதும், ஒருவருக்கொருவர் ஜெபம் செய்யும் போதும்... தம் மீது தோலைக் கொண்டுள்ள தேவன். தேவன் எப்பொழுதுமே தம் மீது தோலைக் கொண்டிருந்தார் என்று நாம் காண்கிறோம். மோசே அவரைப் பார்த்த போது, “அவர் தம் மீது தோலைக் கொண்டிருந்தார். அவர் ஒரு மனிதனைப் போல் காணப்பட்டார். அவர் திரையின் பின்னால் இருந்த போதும் தம் மீது தோலைக் கொண்டிருந்தார். இன்றிரவும் தேவன், தம் மீது தோலைக் கொண்டவராய் தமது சபையில் திரையிடப்பட்டிருக்கிறார். இன்றிரவும் அவர் அதே தேவனாயிருக்கிறார் என்று நாம் காண்கிறோம். எப்பொழுதும் போல இன்றும் அந்த தோல்திரை தான் பாரம்பரியங்களுக்கு இடறலாயுள்ளது. தேவன் தான் ஜனங்கள் அவ்விதம் நடந்து கொள்ளச் செய்கிறார் என்பதை அவர்களால் நம்பமுடியவில்லை, பாருங்கள்? ஏனெனில் தேவன் தம்மீது தோலைக் கொண்டவராய் தமது சபையில் திரையிடப்பட்டிருக்கிறார். அதுஉண்மை. அவர் அவிசுவாசிக்கு மறைக்கப்பட்டு, விசுவாசிக்கு வெளிப்படுகிறார். ஆம், ஐயா. 65மூப்பர்களின் பாரம்பரியம் என்னும் திரையும் அவர்களுடைய கோட்பாடுகளும் கிழித்தெறியப்படும் போது (இன்று அதுதான் நடந்து கொண்டிருக்கிறது). நாம் அவரை வெளிப்படையான காட்சியில் காண்கிறோம் - தெய்வநிலை (Deity) மறுபடியுமாக மாம்சத்தில் திரையிடப்பட்டிருத்தல். எபிரெயர் 1 அவ்விதம் கூறுகின்றது; ஆதியாகமம் 18-ம் கூட. தேவன் ஒரு மனிதனாக அங்கு நின்று கொண்டு, ஆபிரகாமுடன் புசித்து உரையாடி தமக்கு பின்புறத்தில் கூடாரத்துக்குள் சாராள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்று கூறினது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? இயேசு கூறினார் “சோதோமின் நாட்களில் நடந்தது போல் மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும்'' தெய்வநிலை (Deity) மறுபடியுமாக மாம்சத்தில் திரையிடப்பட்டிருத்தல். “தேவனுடைய குமாரன் வெளிப்படும் நாளில்'' என்று இயேசு கூறவில்லை என்பது ஞாபகமிருக்கட்டும், அது லூக்கா 17-ம் அதிகாரம், 20, 21-ம் வசனங்கள் என்று நினைக்கிறேன், ”மனுஷகுமாரன் வெளிப்படும் நாட்களில் என்று தான் அவர் கூறினார். மனுஷகுமாரன் மறுபடியுமாக சபையில் மானிடர்களில் வெளிப்படுகின்றார் - தேவனுடைய குமாரன் அல்ல. கடைசி நாட்களில் மறுபடியுமாக மனுஷகுமாரன் சபைக்குத் திரும்ப வந்திருக்கிறார். அவர் இவ்வாறு வாக்குத்தத்தம் செய்துள்ளதை தேவனுடைய வாக்குத்தத்தங்களில் நாம் காணலாம். 66வேறொன்றை நாம் காண்கிறோம். பழைய ஏற்பாட்டிலே (யாத்திராகமத்திலிருந்து வசனத்தை இங்கு குறித்து வைத்திருக்கிறேன்). அந்த தகசுத்தோல்... அது என்ன செய்தது? அது ஜனங்களிடமிருந்து தேவனுடய மகிமையை மறைத்தது. ஜனங்கள் அதைக் காணமுடியாத காரணம் என்னவெனில், அந்த தகசுத்தோல் அதை மறைத்தது, தேவனுடைய மகிமை அந்த தோலுக்குப் பின்னால் இருந்தது. ஆனால் இப்பொழுதோ தேவனுடைய மகிமை உங்கள் தோலுக்குப் பின்னால் உள்ளது (அது உண்மை). பாரம்பரியங்கள் அதைக் காணமுடியவில்லை. அது திரைக்கு பின்னால் உள்ளது. அங்கு வார்த்தை உள்ளது. 67அங்கே அந்த இருந்த அந்த தோல், அந்த பழைய தக்சுத்தோல்களுக்குள்ளாக இருந்தது என்ன? அது என்னவென்றால், நாம் விரும்பத்தக்க ரூபம் அதற்கு இல்லாதிருந்தது. ''அது மாம்சமாகி நமது மத்தியில் வாசம் பண்ணினபோதும்“, நாம் விரும்பத்தக்க ரூபம் அதற்கு இல்லாதிருந்தது. இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. நாம் விரும்புவதற்கு ஒரு ஆணிலோ அல்லது பெண்ணிலோ ஒன்றுமில்லை. அந்த தோலுக்குப் பின்னால் என்ன இருக்கிறதோ, அதுதான் முக்கியமானது. அந்த மனிதன் குடிகாரனாயிருந்தான், “அவன் முன்பு இதை செய்து கொண்டிருந்தான்'' என்று நீங்கள் கூறலாம். அவன் முன்பு என்ன செய்தான் என்று எனக்குக் கவலையில்லை. அந்த தோலுக்குப் பின்னால் என்ன இருக்கின்றது? அதுதான் முக்கியம்... ஜனங்கள் குருடாக்கப்பட்டுள்ளனர். தோல் அவர்களை குருடாக்குகின்றது. பாருங்கள்? அந்த ஸ்திரீ முன்பு இதை செய்து கொண்டிருந்தாள் என்கின்றனர். அவள் முன்பு என்ன செய்து கொண்டிருந்தாள் என்று எனக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது என்ன? பாருங்கள் தகசு (Badger) என்னும் மிருகத்தின் மேல் முன்பு இருந்த தோல், இப்பொழுது தேவனுடைய மகிமையை மறைத்துக் கொண்டிருக்கிறது. அந்த தோலுக்குப் பின்னால் தேவனுடைய மகிமை வாசம் செய்கிறது. அது ஒரு மிருகத்தின் மேல் இருந்தது. இப்பொழுதோ அது தேவனுடைய மகிமை வாசம் செய்யும் வீடாக உள்ளது. எனவே இன்றிரவு உங்கள் தோல் தேவன் வாசம் செய்யும் வீடாக மாறுவதாக - தேவன் மானிடரில் வாசம் செய்தல். 68கவனியுங்கள், அந்த தகசுத் தோலுக்குப் பின்னால் வார்த்தை இருந்தது என்று நாம் காண்கிறோம். அங்கு சமுகத்தப்பமும் இருந்தது. உடன்படிக்கை பெட்டி இரத்தத்தால் தெளிக்கப்பட்டது. அது என்ன? ஷெகினா மகிமை அங்கிருந்தது. வார்த்தை என்பது ஒரு விதை. சூரிய ஒளி அதன் மேல் படாமல் அது பலனைத் தராது. அதை வளரச் செய்ய சூரிய ஒளி அதன் மேல் பட வேண்டும். அந்த ஒரு வழியில் மாத்திரமே நீங்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியும். பாருங்கள்? தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயங்களில் ஏற்றுக்கொண்டு ஷெகினா மகிமைக்குள் பிரவேசியுங்கள். அப்படி செய்தால், அது சமுகத்தப்பத்து மன்னாவைக் கொண்டு வரும், அது பிரித்தெடுக்கப்பட்ட மக்களுக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டது. அதை புசிப்பதற்கு யாருக்கு அனுமதி அளிக்கப்பட்டதோ, அவர்கள் மாத்திரமே அதை புசிக்க முடியும். “மகிமையின் மேல் மகிமையடைந்து”, என்று பவுல் கூறுவதைக் கவனியுங்கள். பார்த்தீர்களா? முடிவில் அது மூல மகிமைக்கு திரும்பிவர வேண்டும். அது 'மார்னிங் க்ளோரி' (Morning Glory) என்னும் பூவின் விதையைப் போன்றது. 69அந்த பூவின் விதை தரையில் விழுகின்றது. தானியத்தின் விதை தரையில் விழுகின்றது. முதலில் என்ன நேரிடுகின்றது? அது ஒரு சிறு துளிர் விடுகின்றது. பின்பு அது மகரந்த பொடிக்கு வருகிறது. அங்கிருந்து அது மறுபடியும் மூல தானியத்துக்கு திரும்ப வருகிறது. அதைத் தான் சபையும் செய்துள்ளது. அது லூத்தர், வெஸ்லி ஆகியோரின் வழியாக வந்து, மூல தானியத்தை - மூல மகிமையை; அதாவது, ஆதியில் இருந்த அந்த மகிமையை அடைகிறது. கிழக்கில் உதித்த அதே சூரியன், இப்பொழுது மேற்கில் அதையே வெளிப்படுத்துகிறது - மகிமையின் மேல் மகிமையடைந்து. அஞ்ஞானத்திலிருந்து அது லூத்தருக்கு வந்தது. லூத்தரிலிருந்து அது வெஸ்லிக்குச் சென்றது, வெஸ்லியிலிருந்து பெந்தெகொஸ்தேயினருக்கு, இப்படியாக அது மகிமையின் மேல் மகிமையடைந்து, மறைவான மன்னாவை வளரச் செய்தது. இப்பொழுது அது முதிர்வடைந்து அவர் தொடக்கத்தில் எப்படியிருந்தாரோ, அதே நிலைக்கு அவரை மறுபடியும் கொண்டு வந்துவிட்டது - அதே ஊழியம், அதே இயேசு, அதே வல்லமை, அதே பரிசுத்த ஆவி. பெந்தெகொஸ்தே நாளன்று இறங்கிய அதே பரிசுத்த ஆவி இன்றைக்கு வெளிப்பட்டு மகிமையின் மேல் மகிமையடைந்து, மூல விதைக்கு திரும்ப வந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று அதே அடையாளங்கள், அதே அற்புதங்கள், அதே ஞானஸ்நானம், அதேவிதமான ஜனங்கள் அதே விதமாக நடந்து, அதே வல்லமையை, அதே உணர்வை பெற்றுள்ளனர். அது மகிமையின் மேல் மகிமையடைதல், அடுத்தபடியாக நாம் இந்த மகிமையிலிருந்து மாறி அவருடைய, மகிமையின் சரீரத்தைப் போன்ற சரீரத்தை பெறுவோம். அங்கு அவரைக் காண்போம், ஆபிரகாம் அதைத் தான் கண்டான். 70கவனியுங்கள், அது எப்படி மகிமையின் மேல் மகிமையடைந்தது என்று நாம் காண்கிறோம். கல்வாரி முதற்கொண்டு, “அவர் மகிமையில் நாம் பங்கு கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம். அவருடைய சரீரத்திற்குள்ளாக நாம் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்'' என்று 1 கொரி: 12 உரைக்கிறது. ”ஒரே ஆவியினாலே நாம் எல்லாரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்.'' ஒரே தண்ணீரினால் அல்ல. அது உண்மை. அப்பொழுது நாம் அவரில் ஒரு பாகமாகிறோம். உங்களை அதிக நேரம் பிடித்து வைக்கவில்லை என்று நினைக்கிறேன். (சபையார் இல்லை என்கின்றனர் - ஆசி). அப்படி இல்லை என்று நம்புகிறேன். அது இசை இசைக்கும் ஒரு கம்பீரமான இன்னிசையாகவோ (Symphony) அல்லது கதாபாத்திரங்கள் நடிக்கும் ஒரு நாடகமாகவோ அமைந்துள்ளது. எனக்கு இன்னிசை பற்றியோ நாடகத்தை பற்றியோ அதிகம் தெரியாது. நான் உங்களிடம் ஏற்கெனவே கூறினபடி, என் மகளும் மற்றவர்களும் நடித்த 'கார்மென்' (Carmen) என்னும் நாடகத்தை நான் கண்டேன். அவர்கள் அந்த நாடகத்துக்குரிய இன்னிசை இசைத்தனர். அதே சமயத்தில் நடிகர்களும் நாடகத்தை நடித்தனர். இரண்டும் பொருந்தின. நீங்கள் பரிசுத்த ஆவியினால் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பண்ணப்படும்போதும் அப்படித்தான் இருக்கும். 71உங்களில் அநேகர் 'பீட்டரும் ஓநாயும்' என்பதற்கு இசை இயற்றிய அந்த பிரபல ருஷிய இசை இயற்றுபவரை (composer) குறித்து படித்திருப்பீர்கள். அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள். அது முழுவதுமே அடையாளங்களால் நடிக்கப்படுகின்றன. அந்த கதையை புத்தகத்தில் படித்தவர்கள் அந்த இன்னிசையை கேட்கும்போது, அந்த கதைக்குப் பொருத்தமாக இன்னிசை எங்கே மாறுகிறது என்பதை நன்கு அறிவர். ஒருவேளை அந்த கதைக்கு ஏற்றவாறு இசை இயற்றுபவர் இயற்றாமல் போனால், ஏதோ ஒன்று குறைவாயுள்ளது என்று நாம் கண்டுகொள்ளலாம். இன்னிசை தவறான இசை இசைத்தால், ஏதோ தவறுள்ளது. இசை இயக்குநர் (director) தவறான சைகை காட்டியிருப்பார். பாருங்கள்? 72என் லூத்தரன் சகோதரரே, என் பாப்டிஸ்டு சகோதரரே, என் பெந்தெகொஸ்தே சகோதரரே, பல்வேறு ஸ்தாபனங்களிலுள்ள என் அனைத்து சகோதரரே, இன்று நடந்து கொண்டிருக்கும் விவகாரம் அதுவே பாருங்கள்? இசை எழுதப்பட்டதாள் (Music sheet). இது வேறொரு நாள் என்று காண்பிக்கும் போது, நீங்கள் லூத்தரின் காலம் அல்லது வெஸ்லியின் காலத்திற்கான இசையை இசைக்க முயல்கின்றீர்கள். பாருங்கள்? பாருங்கள்? நாம் லூத்தர் பெற்ற வெளிச்சத்தில் வாழ முடியாது. அவர் ஒரு சீர்திருத்தக்காரர். அவருடைய பங்கை நாம் பாராட்டுகிறோம், ஆனால் ஏற்கெனவே அந்த இசையை கருவிகளில் நாம் இசைத்து முடித்துவிட்டோம். நாம் இப்பொழுது இசை எழுதப்பட்டுள்ள புத்தகத்தின் பின் பக்கத்திற்கு வந்துவிட்டோம். நாம் மறுபடியும் முன் பக்கங்களிலுள்ள இசையை இசைக்க முடியாது. 73என் சகோதரரே, நீங்கள் செய்யக் கூடிய ஒன்றே ஒன்று... உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்துள்ள என் சகோதரரே, இசை இயக்குநர் செய்யக் கூடியது ஒன்றே ஒன்றுதான். இசை இயற்றியவர் இருந்த அதே ஆவிக்குள் இசை இயக்குநர் வருவாரானால், அப்பொழுது அவர் அதை சரியாக இயக்குவார். சபையும் அந்த இன்னிசையாகிய சபையும் தாமே, இந்த அடையாளங்கள் மற்றும் அற்புதங்களுக்காக காத்து கவனித்துக் கொண்டிருக்கையில்; சபையும், இன்னிசை இயற்றியவரும் மற்றும் இயக்குநர் எல்லாரும் இன்னிசை இயற்றியவரின் ஆவிக்குள் செல்வார்களானால். (அந்த அடையாளங்களையும், அற்புதங்களையும் உலகம் கவனித்துக் கொண்டு வருகின்றது.) இயக்குநரும் எல்லோருமே இயற்றியவரின் ஆவியைப் பெற்றிருப்பார்களானால், 74''அற்புதங்களின் காலம் முடிவுற்றுவிட்டது'' என்று அவர்கள் கூறும் போது, அது சரியான இசை இசைத்ததன் அறிகுறியல்ல. அவர்கள் சரியான ஆவிக்குள் வந்து சரியான இசையை இசைக்கும் போது... இயற்றியவரின் ஆவி உங்கள் மேல் வராமல், நீங்கள் எவ்வாறு அதை செய்யப் போகின்றீர்கள்? ஆமென்! நீங்கள், “அற்புதங்களின் காலம் இன்னும் முடிவு பெறவில்லை'' என்னும் போது, இன்னிசை 'ஆமென்' என்று கூறும். நாம், ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்று மாறாதவராயிருக் கிறார்'' என்னும் போது, இன்னிசை 'ஆமென்' என்று கூச்சலிடும். ''பரிசுத்த ஆவி உங்கள் மேல் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள்'' இன்னிசை ''ஆமென்! நான் பெற்றுக் கொண்டேன்“ என்று கூறும். அதன் பின்பு எந்த வித ஊகமும் (guess work) இருக்காது. இன்னிசை முழுவதுமே வார்த்தையுடன் இசைவாய் இணைந்திருக்கும். அது தொடர்ச்சியாக இசைத்துக் கொண்டே செல்லும் (அதை வலியுறுத்த சகோ. பிரன்ஹாம் தொடர்ச்சியாக கை கொட்டுகிறார் - ஆசி). அதுதான். ஓ, அது மிகவும் இனிமையானது. இயக்குநரும் இயற்றியவரும் ஒரே ஆவியில் இருக்க வேண்டும். அது போன்று இசைக் கருவிகள் இசைப்பவர்களும் அதை சரியாக இசைக்க அதே ஆவியில் இருக்க வேண்டியது அவசியம். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உலகம் வியந்து கொண்டிருக்கிறது. அவர்கள் கம்யூனிஸத்தைக் குறித்து பேசுகின்றனர். அது என்னை வெறுப்படையச் செய்கிறது. இந்த ஒன்றுபடுதல் (integration), ஒதுக்கப்படுதல் (segregation) ஆகிய அனைத்தும்... ஓ, கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ள போது இந்த அர்த்தமற்ற காரியங்கள் அனைத்தும் எங்கோ தவறாக இசைக்கப்படுகின்றது. இயக்குநர்கள் இயற்றியவரின் ஆவியிலிருந்து விலகிச் சென்றுவிட்டனர் என்று ஐயமுறுகிறேன். 75நாம் இயற்றியவரின் ஆவியை - தேவனுடைய மூல வல்லமையை - பெறும் போது (தேவனுடைய மனிதர்கள்) அந்த பரிசுத்த ஆவியின் வல்லமையினால் ஏவப்பட்டு தான் வேதாகமத்தை எழுதினர். சீனனின் காகிகத் துண்டுகள் ஒன்றாக இணைவது போல், தேவனுடைய வேதாகமும் விசுவாசியும் ஒன்றாக இணைவதை நீங்கள் காண்பீர்கள். ஏனெனில் இருவரும் ஒரே ஆவியில் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒன்றே. அவர்கள் புறாவின் வாலைப் போல் ஒன்றாக இணைந்து விடுகின்றனர். இன்றைக்கு நமக்கு தேவை இயக்குநர்களே, அது உண்மை. வார்த்தைக்குத் திரும்பிச் சென்று, அது கூறியுள்ளவாறே விசுவாசித்தல். அப்பொழுது நீங்கள் தேவனையே காண்பீர்கள். அது தான் திரை நீக்கப்படுதல். நாடகம் தத்ரூபமாகிவிடுகிறது. 76இன்று அவர்கள், “அவர் ஒரு சரித்திரப் பிரகாரமான தேவன், அவர் சிவந்த சமுத்திரத்தைக் கடக்கச் செய்தார். அதையெல்லாம் அவர் செய்தார். எபிரெய பிள்ளைகளுடன் அவர் எரிகிற அக்கினிச் சூளைக்குள் இருந்தார்'' என்றெல்லாம் கூறுகின்றனர். அவர் இன்றும் மாறாதவராக இருக்காவிட்டால், சரித்திரப் பிரகாரமான ஒரு தேவனால் என்ன பயன்? தேவன் செய்தவைகளுக்காக மனிதன் அவரை மகிமைப்படுத்துகிறான், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கிறான். ஆனால் அவர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவன் அசட்டை செய்கிறான். அது மனிதனின் இயல்பு. சகோதரரே, இன்றும் அவ்வாறே நடக்கின்றது. ஓ, என்ன! நாம் திரும்பிச் சென்று, காணத்தக்கதாக இன்னிசை சரியாக இருக்கும்படி செய்வோம். “நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்வேன்'' என்றார். இயேசு. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரயிருக்கிறார். இயக்குநர்கள் இசைக்கருவிகள் இசைப்பவர்களுடனும் இயற்றியவருடனும் சரியான ஆவியில் வரட்டும். அப்பொழுது எல்லாம் சரியாகிவிடும். அப்பொழுது எந்த விதமான ஊகமும் இருக்காது. நாம் அவருடன் அப்பொழுது நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம் (identified). அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று எபி: 13:8 உரைக்கிறது. 77அவருடன் அப்போஸ்தலர் 2-ல் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அவர்களுடன் நாம் அதே ஞானஸ்நானம், அதே காரியங்களின் மூலமாய் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அவர் அன்று என்னவாயிருந்தாரோ, இன்று என்னவாயிருக்கிறாரோ, அவையெல்லாம் நாமாக இருக்கிறோம். அது முற்றிலும் உண்மை. நான் உண்மையான அமெரிக்கனாக இருக்க வேண்டுமானால் அந்த தேசம் என்னவாயிருந்ததோ, இன்று என்னவாயுள்ளதோ, அவையனைத்திலும் என்னை நான் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படியானால் நான் பிளைமெளத் பாறையில் (Plymouth Rock) வந்து இறங்கினேன். ஆமென்! நீங்களும் உண்மையான அமெரிக்கர்கள் என்னும் நிலையில் அப்படி செய்தீர்கள். அதாவது யாத்ரீக பிதாக்களுடன் பிளைமெளத் பாறையில் வந்து இறங்கினீர்கள். அவர்கள் அங்கு அடைந்தபோது, நானும் அவர்களுடன் கூட இருந்தேன். நீங்களும் இருந்தீர்கள். எல்லோருமே. 78நான் பால் ரிவியர் என்பவருடன் சவாரி செய்து வரப்போகும் ஆபத்தைக் குறித்து எச்சரித்தேன். அது முற்றிலும் உண்மை. இந்த ஃபோர்ஜ் பள்ளத்தாக்கில், பனிக்கட்டி உறைந்திருந்த டெலாவரை (Delaware ) நானும் ஒரு கூட்டம் இராணுவ வீரர்களுடன் கடந்தேன்; அவர்களில் பாதி பேருக்கு காலணிகள் இருக்கவில்லை. நான் முன் கூட்டியே, ஜார்ஜ் வாஷிங்டனுடன் இரவு முழுவதும் ஜெபித்தேன். என் இருதயத்தில் ஒரு குறிக்கோளுடன் நான் டெலாவரைக் கடந்தேன். நாம் அமெரிக்கர்கள். ஆம், ஐயா! ஃபோர்ஜ் பள்ளத்தாக்கில் நான் நிச்சயம் அப்படி செய்தேன். நன்றி செலுத்தின பிதாக்களுடன் நானும் தேவனுக்கு நன்றி செலுத்தினேன்... நான் உண்மையான அமெரிக்கனாயிருந்தால், அந்த மேசையில் நான் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன். நான் உண்மையான அமெரிக்கனாயிருந்தால், நான் ஸ்டோன் வால் ஜாக்ஸனுடன் நின்று கொண்டிருந்த போது, அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன். நான் உண்மையான அமெரிக்கனாயிருந்தால், போஸ்டன் தேநீர் விருந்தில் நான் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன். ஆம், ஐயா! - நாம்அதற்கு சம்மதிக்க மறுத்தபோது. ஆம், ஐயா! ஓ, என்னே! 791776-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதியன்று நான் சுதந்தர மணியை அடித்து, நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பிரகடனம் செய்தேன். உண்மையான அமெரிக்கனாயிருக்க நான் அப்படி செய்திருக்க வேண்டும். அந்த புரட்சியின் போது சகோதரர் சகோதரர்களை எதிர்த்து சண்டையிட்டார்களே, தேசத்துக்கு அப்பொழுது நேர்ந்த அவமானத்தில் நான் ஒன்றுபடுத்தப்பட்டேன். அதன் வெற்றியில் எனக்கு எவ்வளவு பங்குண்டோ, அது போல் அதன் அவமானத்திலும் எனக்கு பங்குண்டு. நான் அமெரிக்கனானால், அப்படித்தான் செய்யவேண்டும். ஆம், ஐயா! லின்கன் கெட்டிஸ்பர்கில் சொற்பொழிவாற்றின் போது! நான் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன். ஆம், ஐயா. வேக் தீவில், இரத்தம் சிந்தி மரித்த இராணுவ வீரர்களின் சடலங்களின் மேல் நான் இருந்தேன். நான் வேக் தீவில் எழுந்தேன். குவாமில் (Guam) நமது கொடியை ஏற்ற நான் உதவியாயிருந்தேன். நான் உண்மையான அமெரிக்கன், ஆமென்! அந்த தேசம் என்னவெல்லாமாக இருந்ததோ, அவையனைத்தும் நானாக இருக்கிறேன். அதைக் குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன். ஆம், உண்மையாக! அமெரிக்கா என்னவெல்லாமாக இருந்ததோ, இப்பொழுது இருக்கிறதோ, அமெரிக்கன் என்னும் நிலையில், அவையெல்லாமாக நான் இருக்கிறேன். ஏனெனில் அதனுடன் நான் அடையாளங்கண்டு கொள்ளப்பட்டிருக்கிறேன். 80உண்மையான கிறிஸ்தவனும் அப்படித்தான் இருக்கவேண்டும். அதனுடன் நீ அடையாளங்கண்டு கொள்ளபட்டிருக்க வேண்டும். நான் நோவாவுடன் பிரசங்கம் செய்து, வரப்போகும் நியாயத் தீர்ப்பைக் குறித்து ஜனங்களை எச்சரித்தேன் - நான் உண்மையான கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமென்றால், எரிகிற முட்செடியினருகே நான் மோசேயுடன் கூட இருந்தேன், நான் அக்கினி ஸ்தம்பத்தை அங்கு கண்டேன், அவருடைய மகிமையைக் கண்டேன். வனாந்திரத்தில் நான் மோசேயுடன் கூட இருந்தேன். கிறிஸ்தவனாக இருக்க தேவன் என்னவாயிருந்தாரோ அவை அனைத்துடன் என்னை நான் ஒன்றுபடுத்திக் கொள்ளவேண்டும். அவருடைய மகிமையை நான் கண்டேன்; அவருடைய சத்தத்தை நான் கேட்டேன். அது அப்படியல்ல என்று எனக்கு விளக்கம் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில் நான் அங்கிருந்தேன். நான் என்ன பேசுகிறேன் என்று உறுதியாக அறிவேன். நடந்தவைகளை நான் கண்டேன். ஆம். ஐயா! 81தேவனுடைய ஆவி அசைவாடி சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்தபோது, நான் அங்கிருந்தேன். நாணல் புல்லின் (Reeds) வழியாக நடந்ததாக இன்று கூறுகின்றனரே அவர்கள் தொண்ணுறு அடி ஆழமுள்ள சமுத்திரத்தின் வழியாகத்தான் கடந்து சென்றனர். பரிசுத்த ஆவி அவ்வாறு செய்வதை நான் கண்டேன். நான் மோசேயுடன் உலர்ந்த தரையில் நடந்து சிவந்த சமுத்திரத்தைக் கடந்தேன். நான் சீனாய் மலையின் மேல் நின்று இடி முழங்குவதையும் மின்னல் அடிப்பதையும் கண்டேன். அவர்களுடன் நான் மன்னாவைப் புசித்தேன். அந்த கன்மலையின் தண்ணீரை நான் குடித்தேன். இன்றிரவு கூட நான் அப்படி செய்து கொண்டிருக்கிறேன். மன்னா புசித்தவர்களுடன் கூட நான் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டேன். கன்மலையின் தண்ணீரைக் குடித்தவர்களுடன் நான் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன். யோசுவா எக்காளம் ஊதி எரிகோவின் சுவர்கள் விழுந்த போது, நான் அவனுடன் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன். நான் தானியேலுடன் சிங்கங்களின் கெபியில் இருந்தேன். எபிரெய பிள்ளைகளுடன் நான் எகிற சூளையில் இருந்தேன். நான் கர்மேல் பர்வதத்தின் மேல் எலியாவுடன் கூட இருந்தேன். 82நான் யோவான் ஸ்நானனுடனும், குற்றம் கண்டு பிடித்தவர்களின் முன்னிலையிலும் இருந்தேன். தேவனுடைய ஆவி இறங்கி வருவதை நான் கண்டேன். “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்'' என்றுரைத்த தேவனுடைய சத்தத்தை நான் கேட்டேன். ஆம், ஐயா! நான் நிச்சயமாக அவனுடன் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன். அது முற்றிலும் உண்மை. இயேசு லாசருவை எழுப்பின்போது, லாசருவின் கல்லறையினருகே நான் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன். அவர் கிணற்றினருகே இருந்த ஸ்தீரீயின் பாவங்களை வெளிப்படையாக அறிவித்த போது, நான் அங்கே அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன். ஆம், ஐயா நான் நிச்சயமாக அவருடைய மரணத்தில் என்னை ஒன்றுபடுத்திக் கொண்டேன். முதலாம் ஈஸ்டரின் போது, நான் என்னை ஒன்று படுத்திக்கொண்டேன். அவருடன் நானும் உயிர்த்தெழுந்தேன். அவருடைய மரணத்தில் என்னை நான் இணைத்துக் கொள்கிறேன். நான் 120 பேர்களுடன் மேலறையில் இருந்தேன். அவர்களுடன் நான் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டேன். ஓ, நான் பக்திபரவசமடைகிறேன். ஆமென் அவர்களில் நான் ஒருவனாக இருந்தேன். அவர்கள் பெற்ற அனுபவத்தை நானும் பெற்றேன். உண்மையான கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமானால், அது நிகழ்ந்த போது நானும் அங்கிருந்தேன். பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல் ஒரு முழக்கம் வானத்திலிருந்து இறங்கினதை நான் கண்டேன். தேவனுடைய வல்லமை அந்த இடத்தை அசைத்த போது, நானும் அதை உணர்ந்தேன். வெவ்வேறு பாஷைகளில் பேசின அவர்களுடன் நானும் இருந்தேன். அபிஷேகம் அங்கு இறங்கினதை நான் உணர்ந்தேன். நான் அவர்களுடன் கூட இருந்தேன். அவர்கள் மூலம் பரிசுத்த ஆவி வெவ்வேறு பாஷைகளில் பேசின போது நானும் அவர்களுடன் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன். அப்போஸ்தலர் 2-ல் பேதுரு அவன் மேல் குற்றஞ்சாட்டினவர்களின் முன்னிலையில் நின்று அந்த மகத்தான பிரசங்கத்தை நிகழ்த்தின் போது நானும் அவனுடன் இருந்தேன். 83அப்போஸ்தலர் 4-ல் அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்த போது, நானும் அவர்களுடன் இருந்தேன். அவர்கள் ஜெபம் பண்ணின போது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களுடன் நான் அங்கு அடையாளம் கண்டுகொள்ளப்பட்டேன். நான் பவுலுடன் மார்ஸ் மேடையில் பிரசங்கம் செய்தேன் ஆம், ஐயா! நான் யோவானுடன் பத்மு தீவில் இருந்து அவருடைய இரண்டாம் வருகையைக் கண்டேன். சீர்த்திருத்த காலத்தில் நான் லூத்தருடன் இருந்தேன். ஆங்கிலிகன் சபைக்கு விரோதமாக புரட்சி எழும்பின் போது, நான் பேச்சு சாதுரியம் வாய்ந்த வெஸ்லியுடன் இருந்தேன். 1964-ல் இன்றிரவு நான் பென்சில்வேனியாவிலுள்ள பிலதெல்பியாவில் இருந்து கொண்டு, அதே விதமான அனுபவத்தைப் பெற்ற அதே விதமான குழுவுடன்அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறேன். தேவனுடைய வார்த்தை எங்கு வெளிப்படுகின்றதோ, அங்கு என்னை நான் ஒன்று படுத்திக்கொள்ள வேண்டும். தேவனுடைய ஆவியை உணரும் கூட்டத்தாருடன் என்னை நான் ஒன்று படுத்துகிறேன். 84அவர் திரை நீக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும், இது மூடபக்தி வைராக்கியம் அல்லவென்றும் அறிந்திருக்கும் கூட்டத்தாருடன் - அவர்கள் மதத் துரோகிகள் என்று அழைக்கப்பட்ட போதிலும் -இன்றிரவு என்னை ஒன்றுபடுத்திக் கொள்கிறேன். தேவனுடைய வார்த்தையின் நிமித்தம் அவர்கள் மூடபக்தி வைராக்கியம் கொண்டவர் என்றழைக்கப்படுகின்றனர். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன். அவர்களுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது. நான் சற்று முன்பு கூறின அந்த ஜீவிக்கிற நிருபங்களுடன் - உறுதிபடுத்தப்பட்டு, தேவன் திரைமறைக்கப்பட்டுள்ள இந்த ஆண்களுடனும் பெண்களுடனும் - என்னை நான் ஒன்றுபடுத்திக் கொள்கிறேன். ஓ! 85தேவன் - தமது மகிமையை விட்டு இறங்கி வந்த அந்த மகத்தான ராஜா - மறுபடியும் உருவம் மாறி திரை நீக்கப்பட்டவராய், தம்மை ஜனங்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். “இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம் என்னைக் காணாது. நான் அவர்களுக்கு திரை மறைக்கப்பட்டிருப்பேன். நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் உங்களோடிருந்து, முடிவு பரியந்தம் உங்களுக்குள் இருப்பேன். நான் லூத்தரிலிருந்து வெஸ்லிக்கு மாறி, இப்படியாக மகிமையின் மேல் மகிமையடைகிறேன். நான் இன்னும் அதே தேவன் - மூல மகிமைக்கு திரும்பவும் சென்று கொண்டிருக்கிறேன்'' அல்லேலூயா! 86அவர் எல்லா ஸ்தாபன தடைகளையும், எல்லா ஒலித் தடைகளையும் முறித்துப் போட்டார். “ஓ, அது மூடபக்தி வைராக்கியம்'' என்று கூறும் அந்த ஒலியை அவர் ஊடுருவிச் சென்றார். “ஓ, அவர்கள் பைத்தியக்காரர்கள்'' என்று கூறும் அந்த ஒலி அந்த திரையை அவர் உடைத்தெறிந்தார். ஆம், அவர் செய்தார். “ஓ, உங்களால் அதை செய்ய முடியாது. நீங்கள் மூட பக்தி வைரக்கியம் கொண்ட கூட்டத்தாரேயன்றி வேறல்ல. அவர் அதை உடைத்து அதன் வழியாகச் சென்றார். “தெய்வீக சுகமளித்தல் என்பது கிடையாது''. அதையும் அவர் உடைத்து விட்டார் (ஓ, என்னே!) ஏனெனில் அவர் சுகமளிப்பவர் என்று அவருடைய வார்த்தை கூறியுள்ளது. நீங்கள் தேவனுடைய வார்த்தையை ஜெயிக்க முடியாது. அதோ, இன்றிரவு அவர், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் ஆகிய எல்லா வகையான திரைகளையும் உடைத்து, வெற்றி சிறந்தவராக அங்கு நின்று கொண்டிருக்கிறார். இன்றைக்கும் அவருடைய ஜனங்களின் மத்தியில் அவர், பாரம்பரியங்கள் அவர் மேல் ஜெயங்கொள்ளாத நிலையில், நின்று கொண்டிருக்கிறார். ஜனங்கள் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். அந்த ஒலித்தடையை உடைத்து கொண்டு தேவன் வருகிறார். 87ஒரு ஆகாய விமானம் ஒலித்தடையை மீறி வேகத்தில் பறந்தால், அதன் வேகத்திற்கு, அளவேயில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்களும், “இயேசு முன் காலத்தில் இருந்தார், இப்பொழுது இல்லை'' என்று கூறும் பாரம்பரியத் தடையை உடைத்து, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதைக் கண்டு கொள்வீர்களானால், இந்த கன்வென்ஷனில் தேவன் செய்யப் போவதற்கு அளவே இருக்காது. இந்த உலகத்திற்கு என்ன தேவையென்பதை அது காண்பிக்கும். நமக்குத் தேவை உலக சந்தை (World Fair) அல்ல, ஜீவனுள்ள தேவனுடைய சமுகத்தில் ஆவியின் நிறைவு பெற்று ஞானஸ்நானம் பெறும் உலக எழுப்புதல்; உருவத்தை மாற்றிக் கொள்ளும் தேவன், மாம்ச சரீரத்தில் தம்மை திரையிட்டுக் கொள்ளுதல். அல்லேலூயா; அதை நான் விசுவாசிக்கிறேன். அவர் ஒவ்வொரு தடையையும், ஒவ்வொரு திரையும், உடைத்தெறிந்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஒவ்வொரு திரையும், அவருடைய சமூகத்தை ஒன்றுமே மறைக்க முடியாது. ஜனங்கள் தங்கள் இருதயங்களில் பசி கொள்வார்களானால், உடைக்கப்பட இருக்கின்ற ஒரு திரை தயாராக உள்ளது. நீங்கள் அதன் பேரில் அப்படியே நம்பிக்கை வைத்திருக்கலாம். அவருடைய மகத்தான பரிசுத்த ஆவியைக் கொண்டு ஒவ்வொரு திரையும் கிழித்தெறியுங்கள்! அந்த மகத்தான வெற்றி சிறப்பவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் இன்றிரவு இங்கே நின்று கொண்டிருக்கின்றார்; எப்பொழுதுமே அவர் செய்து கொண்டிருந்த வியாதியஸ்தரை சுகமாக்குதல், விசுவாசிகளை ஞானஸ்நானத்துக்குள்ளாக்குதல், அவர் தான் அந்த மகத்தான வெற்றி சிறப்பவர். அழிவுக்கென இருக்கின்ற பிசாசுகள் ஓட்டம் பிடித்து ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆம் ஐயா. அவர் இருக்கையில் அப்பிசாசுகள் எப்பொழுதுமே ஓட்டம் பிடித்து ஓடுகின்றன. 88முடிக்கும் நேரத்தில் கூற விரும்புகிறேன்... வயலின் இசைப்பவர் ஒருவரைக் குறித்த ஒரு கதையை அநேக ஆண்டுகளுக்கு முன்பு படித்திருக்கிறேன். அவரிடம் ஒரு பழைய வயலின் இருந்தது (அநேக முறை அக்கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்) அதை அவர் விற்க நினைத்தார். ஏலம் போடுபவன், “இதற்கு எவ்வளவு கொடுப்பீர்கள்?'' என்று கேட்டபோது, ''ஐம்பது சென்டுகள்'' என்று பதில் வந்தது. ''ஒரு முறை, இரண்டு முறை...'' அப்பொழுது பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து வந்து, “ஒரு நிமிடம் பொறும் என்று கூறி, அந்த வயலினைக் கையிலெடுத்து வாசித்தார். இந்த பாடலை அவர் இசைத்தார் என்று வைத்துக் கொள்வோம். இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டு பாவிகள் அந்த வெள்ளத்தில் மூழ்கும் போது அவர்களுடைய பாவக் கறையை போக்கிக் கொள்கின்றனர். அதை வாசித்து அவர் வயலின் கீழே வைத்த போது உலர்ந்த கண்கள் எதுவுமே அங்கில்லை. ஏலமிடுபவன் ''எவ்வளவு கொடுப்பீர்கள்?“ என்று கேட்டான். ஒருவன், ''ஐயாயிரம்“, என்றான். மற்றொருவன், ''பத்தாயிரம்'' என்றான். அது விலை மதிக்க முடியாதது. ஏன்? அந்த வித்வான் அந்த வயலினின் உண்மையான தரத்தை காண்பித்தார். ஓ, சகோதரனே, சகோதரியே, இந்த வார்த்தையை எழுதின வித்வான் - அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் - அவருடைய வயலின் வில்லுக்கு (bow) ரோசின் பிசின் தடவி, உங்கள் இருதயமாகிய வயலினில் அன்போடு இந்த இசையை மீட்டட்டும். இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டு... அப்பொழுது அதன் முழு மதிப்பை நீங்கள் காண்பீர்கள், திரை நீக்கப்பட்ட தேவன் காட்சியில் வருவதை நீங்கள் கண்டு, பெந்தெகொஸ்தே நாளன்று ஜனங்களின் மேல் இறங்கி, அவர்களுக்குள் தம்மை ஊற்றின அவரே இவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். அது உண்மை. நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, நான் முயற்சி செய்தேன், நான் முயற்சி செய்தேன், நான் இதை அதை மற்றதை செய்தேன்'' எனலாம். 89ஒரு நாள் நியூ மெக்ஸிகோவிலுள்ள கார்ல்ஸ்பாட் என்னுமிடத்தில் எனக்கு கூட்டம் இருந்தது. அப்பொழுது நாங்கள் அங்கிருந்த வெளவால்களின் குகைக்குச் செல்ல நேர்ந்தது. காண்பதற்கு அது பேய்கள் உள்ள ஸ்தலம் போல் இருந்தது. நாங்கள் அதற்குள் சென்றோம். அப்பொழுது அங்கிருந்த வழிகாட்டி விளக்குகளை அணைத்துவிட்டார். ஓ, எங்கும் இருள் சூழந்தது. நாம் பயப்படும் அளவிற்கு அது இருளடைந்தது. காலங்களும் அது போன்றே இருளாகிக் கொண்டு வருகின்றன. சபையானது தேவனுடைய வார்த்தையை அறிந்து கொள்ளத் தவறுவதை நாம் காணும்போது; நமது சீயோன் குமாரத்திகள் நடந்து கொள்ளும் விதத்தை நாம் காணும்போது; நமது சகோதரர்கள் புகை பிடித்து, மது அருந்தி, அசுத்தமான நகைச்சுவை துணுக்குகளைக் கூறி, அதே சமயத்தில் கிறிஸ்துவை அறிக்கையிடுவதை காணும் போது (ஓ, என்னே;) அது மிகவும் இருளடைந்துள்ளது. அவருடைய வருகையின் அடையாளங்களை நாம் காண்கிறோம். காலை வரும் முன்பு மிகுந்த இருளாயிருக்கும், அதன் பின்பு விடிவெள்ளி நட்சத்திரம் தோன்றி காலையை வாழ்த்தி, காலை வரப்போகிறது என்று அறிவிக்கும். கவனியுங்கள்! 90அந்த வெளவால் குகையில் அவர்கள் விளக்குகளை அணைத்தபோது, ஒரு சிறுமி உரக்க கூக்குரலிடத் தொடங்கினாள். அந்த வழிகாட்டியின் பக்கத்தில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். வழிகாட்டி விளக்குகளை அணைப்பதை சிறுவன் கண்டான். அவனுடைய தமக்கையாகிய அந்த சிறுமிக்கு பயத்தினால் வலிப்பு வரும் போல் இருந்தது. அவள் மேலும் கீழும் குதித்து, “ஓ, அடுத்ததாக என்ன நேரிடப்போகிறது? என்ன விஷயம்?'' என்று கதறினாள். அந்த பையன் என்ன சொன்னான் தெரியுமா? ''பயப்படாதே, விளக்குகளை போடக்கூடிய ஒரு மனிதன் இருக்கிறார்''. தங்கையே, கவனி, நாம் சிறு கூட்டம் என்றும், சிறு பான்மையோர் என்றும் நீ நினைக்கலாம். பயப்படாதே, விளக்குகளைப் போடக் கூடிய ஒரு மனிதன் இங்கிருக்கிறார். அவர் தான் பரிசுத்த ஆவி. அவரை நீ விசுவாசிக்கிறாயா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). 91சற்று நேரம் தலைவணங்குவோம். இவ்வளவு நேரம் உங்களை நிறுத்தி வைத்ததற்கு வருந்துகிறேன். ஓ, பரலோகத்தின் தேவனே, உம்மை திரை நீக்கி வெளிப்படுத்தி, உம்மை அறிந்து கொள்ளச் செய்யும் மகத்தான மகிமையின் ராஜாவே இன்றிரவு கூறப்பட்ட சிறு உதாரணங்களை ஜனங்களின் இருதயங்களில் பதியச் செய்வீராக. திரை நீக்கப்பட்ட அவரை - கீழே இறங்கி வந்து தேவாலயத்தின் திரைச் சீலையை இரண்டாகக் கிழித்து, அந்த திரையின் வெளியே வந்து, பெந்தெகொஸ்தே நாளன்று மனித திரைக்குள் மறுபடியும் வந்து, அன்று முதல் மாறாதவராக, மகிமையின் மேல் மகிமையடைந்து கொண்டிருக்கும் அவரை - நாங்கள் காண அருள்புரியும். இயற்கை நடந்து கொள்வது போல், நாங்கள் ஒரு சபை காலத்திலிருந்து மறு சபை காலத்துக்கு கடந்து, இப்பொழுது மீண்டும் மூல வித்துக்கு வந்துள்ளோம். இந்த கடைசி காலத்தில், பெந்தெகொஸ்தே நாளன்று விழுந்த அதே மூல ஆவிக்கு நாங்கள் திரும்ப வந்து, அது சாயங்கால வெளிச்சம், “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்” இன்னும் உமது வார்த்தையில் நீர் வாக்குத்தத்தம் செய்துள்ள அநேக காரியங்களை நிறைவேற்றிவிட்டது. பிதாவே, அந்த திரையை உடைத்து உள்ளே செல்லாத ஒருவராவது இங்கிருப்பாரானால், அல்லது திரைக்குள் நுழைந்துள்ள யாரையாகிலும் பாவனை செய்பவர் இங்கிருப்பாரானால், இன்றிரவு அவர்களுக்கு கிருபையளியும். பிதாவே, மகத்தான ஜெயங்கொண்டவர் கிருபையினால் நிறைந்து, மன்னிப்பதற்கு அதிகாரம் பெற்றவராக இங்கு நின்று கொண்டிருப்பதை அவர்கள் காண அருள்புரியும். 92நமது தலைகள் வணங்கியுள்ள இந்நேரத்தில், இங்குள்ள யாராகிலும்... எத்தனை பேர் (இதை நான் கூறலாமா?), ''சகோ. பிரன்ஹாமே, என் கையையுயர்த்துகிறேன். எனக்காக ஜெபியுங்கள்'' என்று கூற விரும்புகிறீர்கள்? நீங்கள் தலை வணங்கின நிலையில், கையை மாத்திரம் உயர்த்துங்கள். நான் ஜெயங் கொண்டவரை காணும் வரைக்கும் எல்லா திரைகளையும் உடைத்தெரிய விரும்புகிறேன'' கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னே, எத்தனை கைகள் வலது பாகத்திலுள்ள முன் மண்டபத்தில் (balconies) இருப்பவர்களே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. பின்னால் உள்ள முன் மண்டபத்தில் உள்ளவர்களும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, நீங்கள் உத்தம மனதோடு இருங்கள். இடது பாகத்திலுள்ளவர்களே, உங்கள் கைகளையுயர்த்தி, “சகோ, பிரன்ஹாமே, அநேக ஆண்டுகளாக நான் கிறிஸ்தவனாக இருந்திருக்கலாம். ஆனால் உண்மையாகவே அந்த திரையின் வழியாய் நான் உள்ளே பிரவேசிக்கவில்லை. நான் உண்மையாகவே அதை செய்யவில்லை. அன்றிருந்தவர்கள் பெற்றிருந்ததை நான் இன்னும் பெறவில்லை'' என்று கூறுங்கள். ''நான் செயற்கை உரமிட்டு வளர்த்த செடி,'' அதைத் தான் நாம் பெற்றிருக்கிறோம். அதில் வளர்ந்த ஒரு செடியை நாம் எடுத்துக் கொள்வோம். அதை நாம் குழந்தையைப் போல் கவனமாகப் பேணிப் பாதுகாத்து, பூச்சி மருந்து தெளித்து, அதற்கு தண்ணீர் ஊற்றவேண்டும். ஆனால் வனாந்திரத்தில் வளரும் அதே செடியைக் கவனியுங்கள். காண்பதற்கு அது மற்ற செடியைப் போல் இருந்தாலும், அதற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. ஆயினும் எந்த விதமான பூச்சியும் அதை அரித்துப் போடுவதில்லை. அது கரடுமுரடாய் உள்ளது. அது உண்மையாக. 93இன்றைய கிறிஸ்தவ மார்க்கத்தை முன்பிருந்த கிறிஸ்தவ மார்க்கத்துடன் ஒப்பிட முடியுமா? இன்று உலகம் முழுவதிலும் நாம் கிறிஸ்தவர் என்று அழைப்பவர் இருக்கின்றனர். அவர்கள் பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின் எழுந்த கிறிஸ்தவர்களைப் போலவா இருக்கின்றனர்? இவர்களை நாம் குழந்தைகளைப் போல் கவனித்து தட்டிக் கொடுக்க வேண்டியதாயுள்ளது. அவர்களுக்கு விருப்பமில்லாததை நீங்கள் கூறநேர்ந்தால், அவர்கள் வெளி நடந்து ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு மாறிவிடுவார்கள். உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? என்ன விஷயம்? அது ஒரு போலி... மைக்கேல் ஆஞ்சலோ என்னும் சிற்பி பிரபலமான அந்த மோசேயின் சிற்பத்தை வடித்தார், ஆனால் அதே போல் தோற்றமளிக்கும் போலி சிற்பங்கள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. மூல (Original) சிற்பத்தைக் குறித்து என்ன? “கர்த்தருடைய இராப்போஜனம்” என்னும் ஓவியத்தைத் தீட்டிய ஓவியர். அந்த ஓவியத்தை விலைக்கு வாங்கவேண்டுமானால், அது கோடிக்கணக்கான டாலர்கள் விலை பெறும். அது எங்கே இருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால் அதை போல் தோற்றமளிக்கும் போலி ஓவியம் ஒன்றை நீங்கள் 1 டாலர் 98 சென்டுக்கு வாங்கலாம். 94இன்றைக்கு அவ்வாறேயுள்ளது. ஒரு மலிவான கிறிஸ்தவன் - கிறிஸ்தவர்களைப் போல் தோற்றமளிக்கும் ஒரு போலி, சபையை சேர்ந்து கொள்பவன் - அவனை ஒரு சிகரெட்டுக்கோ அல்லது பொதுவாக மது அருந்த அழைத்தோ (common drink) வாங்கிவிடலாம். அது போன்று, கூந்தலைக் கத்தரித்துக் கொண்டு, உதடுகளுக்கு சாயம் தீட்டியுள்ள பெண் ஒருத்தியை இந்த உலகத்தின் நாகரீகத்திற்கு விலைக்கு வாங்கிவிடலாம். ஆனால் உண்மையான கிறிஸ்தவனை நீங்கள் தொடவே முடியாது. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற அவரை நான் முழு காட்சியில் காண்கிறேன். ஓ, கிறிஸ்தவனே, நீ உண்மையான கிறிஸ்தவனாயிருக்க விரும்புவதில்லையா? அப்படி விரும்பும் வேறு யாராகிலும் இருந்தால், உங்கள் கைகளையுயர்த்துவீர்களா?... நான் ஜெபிக்கப் போகிறேன். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஓ, அது மிகவும் அருமையானது. கைகளைப் பாருங்கள்... 95எங்கள் பரலோகப் பிதாவே, “உம்முடைய வார்த்தை உம்மிடத்தில் வெறுமையாய் திரும்பவதில்லை. நீர் தான் அவ்வாறு வாக்களித்துள்ளீர். நீர் அப்படி சொல்லியிருக்கிறீர் என்பதை எடுத்துரைப்பது மாத்திரமே என் பொறுப்பு. நீர் கூறியுள்ள வார்த்தைகளை நான் மறுபடியும் கூறுகிறேனர்'' என் வசனத்தைக் கேட்டு, ”என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு“ என்று நீர் வாக்களித்திருக்கிறீர், ஆண்டவரே, இன்று உண்மையான கிறிஸ்தவர்களைப் போல் தோற்றமளிக்கும் அநேக போலிகள் எங்கள் மத்தியில் உள்ளனர். அவர்கள் விசுவாசிப்பதாக கூறிக் கொள்கின்றனர், ஆனால் விசுவாசிப்பதில்லை. அது அம்பலமாகிவிடுகிறது. ஆனால் கர்த்தாவே, உண்மையான கிறிஸ்தவர் சிலரும் இருக்கின்றனர். இங்குள்ள ஒவ்வொரு மனிதனையும், ஸ்திரீயையும், பையனையும், பெண்ணையும், எந்த தேசத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும், எந்த நிறமுடையவராயிருந்தாலும், அவர்கள் எந்த சபையை சேர்ந்தவர்களாயிருந்தாலும்... ஓ, தேவனே, அவர்களை நிரப்புவீராக, இன்று எங்கள் மத்தியில் அதே இயேசு, பெந்தெகொஸ்தே நாளன்று எவ்விதம் இருந்தாரோ, அதே விதமாக பரிசுத்த ஆவியாக இக்காலத்தில் வெளிப்பட்டுள்ளதை இவர்கள் காணட்டும். தேவனுடைய வார்த்தையும் தீர்க்கதரிசனங்களும் நிறைவேறுவதை நாங்கள் கண்டுகொண்டிருக்கும் இந்நாளிலே இதை அருள்வீராக. 96உலக சபை மாநாட்டையும் (World Council of Churches) பெந்தெகொஸ்தே நாளன்று அளிக்கப்பட்ட வாக்குத்தத்தத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். இவ்விரண்டையும் ஒப்பிடவே முடியாது. உலக சபை மாநாட்டிலிருந்து கொண்டு எங்கள் அழுக்கான வஸ்திரங்களை நாங்கள் தூய்மையாக்கிக் கொள்ளமுடியாது. ஆனால், தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் ஊற்றண்டை வருவோமானால், அங்கு சுத்திகரிக்கும் முறைமை உள்ளது. அப்பொழுது எங்கள் அனுபவமும் தேவனுடைய வார்த்தையும் ஒன்றாக இணையும். அப்பொழுது எங்கள் சுதந்தரத்தை நாங்கள் உரிமை பாராட்டி பெற்றுக்கொள்ள முடியும். ஆண்டவரே, இன்றிரவு அதை அருள்வீராக. இவர்களை உமது கரங்களில் சமர்ப்பிக்கிறேன். பிதாவே, எங்களுக்குத் தேவையானதை இவர்கள் ஒவ்வொருவருக்கும் அருள்வீராக. இயேசுவின் நாமத்தில் கேட்கிறாம். ஆமென். 97தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, நீண்ட நேரம் நீங்கள் நின்று கொண்டிருந்ததற்காக உங்களுக்கு மிக்க நன்றி. உங்களை பத்து மணி அடித்து பத்து நிமிடம் வரை நிறுத்தி வைத்துக் கொண்டதற்காக வருந்துகிறேன். நாளை காலை உங்களை நான் சந்திக்கும் வரை, தேவன் உங்களோடு கூட இருப்பாராக. இப்பொழுது ஆராதனையை வைபவத்தின் தலைவரிடம் (Master of Ceremonies) ஒப்படைக்கிறேன்.